26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
யிற் சொல்லப்போனால், நகரத்தார் எவரும் மற்றொரு நகரத்தார்க்கு மனமுவந்து உதவ முன்வருவதில்லை. அங்ஙனம் யாரும் உதவினர் களாயின், அதற்குத் தவிர்க்க முடியாத காரணமுண்டென்பதே உண்மை. எனினும் உலகு வாழ உதவும் அவர்கள் மனப்போக்கு உவகைதருவதேயாம். பாவலர் ஏறு முடியரசர் பெருமிதத்தோடு புனையும்போது, நெஞ்சம் கிளுகிளுக்கத்தான் செய்கிறது. திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத் திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக்கட்ட வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன் வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப்பந்தர் உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும் அறச்சாலை உண்டாக்கக் குளங்கள்தோண்டப் பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது பெருமை எனப் பேணுவது வணிகர்நாடு ‘கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர் கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டுவிற்பர்; மடல் வரைந்து மனைக்கிழத்தி மனம்மகிழ மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத் தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகை மிகுத்துத் தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கிவந்து படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர் பலபலநல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர்’ (3 :1, 2) குலவிவரும் செல்வத்தைப் பெட்டகத்துட் குவித்தெடுத்துப் பார்ப்பது ஒரு வழக்கம் (3:7). ‘ஆண்டு பதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப்பாலும் தாண்டவிட மாட்டார்கள்; தனவணிகர் வழக்கமிது; மரபின் கொள்கை பூண்டொழுகும் குலம்’ (4:1.) தமிழர்களே பழம்மரபில் பற்றுடையவர்கள் (Conservatives). நகரத்தார்களோ அதனிலும் ஆழமான மரபுபோற்றும் மனத்தினர். இங்ஙனம் நலம்பாராட்டினாலும், திருமணத்தில் அவர்கள் பணமே பெரிதென்று பகட்டித் தம் பண்புக்கு மாறாகப் பிடிவாதத் துடன் செயற்படுவதைத், தலைமேலடித்துக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. |