14. அரசியல் அலுவலகங்களுக்கும் ஊராட்சி நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல். (அ) அரசியல் அலுவலகங்களுக்கு எழுதுதல் இற்றைய நாளில் தமிழன்னை தன்னாட்சி பெற்றுக் கொலு விருக்கின்றாள். ஆதலின், தாய்மொழியிலேயே அனைத்து அலுவலகங் களுக்கும் தொடர்பு கொள்ளலாம். அலுவலகங்களுக்கு எழுதுகின்ற பொழுது கடித முறையைப் பின்பற்றக் கூடாது. அலுவலகத்திற் குரிய முறைப்படி அனுப்புநர், பெறுநர், வணக்கமொழி, பொருள், முடிப்புரை ஆகிய பகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுது கின்ற செய்தியைச் சுருக்கமாகத் தெளிவாக எழுதுதல் வேண்டும். விண்ணப்பம் எழுதுகின்ற பொழுது அவ் வந்நிலைக்குரிய வணக்க மொழியும், பணிவு மொழியும் அமைந்திருந்தல் நல்லது. அலுவல கங்களுக்கு எழுதிப் பயிற்சி பெறுதல் சமுதாயத்திற்கு பெரிதும் பயன்படும் ஆதலின். கீழ்க்கண்ட அலுவலகங்களுக்குப் பின்கண்ட விண்ணப்பங் களை எழுதிப் பழகுக. 1. தெரு விளக்கு எரியவில்லை யென்ற மின்விசைக் கழகத் துணைப் பொறியாளருக்கு விண்ணப்பமொன்று வரைக. |