152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
செய்யுளின் திரண்ட முறை நன்கு மனமொன்றிப் படித்தல் வேண்டும். செய்யுளின் திரண்டபொருளை எழுதுவதற்கு முன், அதனை இருமுறை மும்முறை நன்கு மனமொன்றிப் படித்தல் வேண்டும். அருஞ் சொற்களாயின அவற்றின் பொருளை ‘அகர வரிசை’ முதலியற்றின் துணையாற் கண்டு, பின்பு, பொருளெழுத முற்படல் வேண்டும். காட்டாக:- பாரதிதாசன் பாடலும், அதனுடைய திரண்ட பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் காட்டாகக்கொணடு பிற செய்யுள்களுக்கும் திரண்ட பொரு ளெழுதிப் பழகுக. “கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!” “பழுத்த பழத்தின் சுளையையும், முற்றிய கரும்பின் சாற்றையும், குளிர் மலரில் அமைந்த தேனையும் காய்ச்சுகின்ற வெல்லப் பாகிடை அமைந்த சுவையையும், நல்ல பசு கொடுக்கின்ற பாலையும், தென்னை நல்குகின்ற குளிர்ந்த இளநீரையும் நான் இனிமையுடையன என்று கூறுவேன். ஆனால், தமிழை என்னுடலில் உறைகின்ற உயிர் என்பேன்; காணுங்கள்” என்கின்றார் பாவேந்தர் பாரதிதாசனார். 20. கூட்டங்கள் - மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல் மாநாடுகள் கூட்டப்பெறுகின்ற பொழுதும், கூட்டம் கூடுகின்ற பொழுதும் வருகை தந்துள்ள தலைவர், சொற்பொழி வாளர், பொதுமக்கள் ஆகிய யாவரையும் வரவேற்க வேண்டு மென்பது மரபாகும். ஆதலின் வருகைதந்த பெருமக்களைச் சிறப்பித்து, அவர்கள் செய்த செயல்களைப் பாராட்டி, வரவேற் புரை எழுத வேண்டும். சிறு கூட்டங்களாயின் தலைவரை, வர வேற்று உரை நிகழ்த்துவர். ஊருக்குப் புதிதாக வந்த அறிஞருக்கு, ஆட்சி புரி |