ஒரு பத்தியை முடித்து, அடுத்த பத்தியைத் தொடங்கும் பொழுது, பொருள் நலங்கருதியும் எழில் நலங்கருதியும், தக்க இடைவெளி விட்டும், இடப்புறத்தில் சிறிது இடம் விட்டும் எழுதத் தொடங்குதல் வேண்டும். நும் பாடப் புத்தகத்தில் உள்ள பத்தியை நோக்கி இதனைத் தேர்க. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பத்திகளையும் நோக்குக: “முன்பு இசைக் கலையின் உயிர் நாடியாக ‘யாழ்’ என்னும் கருவி திகழ்ந்தது; அக் கருவியை இயக்குவதிலே திறமை மிக்கதாய்ப் “பாணர் குடி” எனும் கலைஞர் பரம்பரை ஒன்று வாழ்ந்து. காலவெள்ளத்தில் படிப்படியாக இப் பாணர் குலமும், யாழும், தமிழ்ப்பண் மரபும் மறைந்துபோயின. ‘நமது கலையிழப்பு’ வரலாற்றில், உள்ளம் உருக்கும் உச்ச நிலையில் நிற்பது ‘யாழ் இழப்பு, வரலாறேயாகும்.” - தமிழண்ணல். இப் பத்தியின் கருத்து அல்லது குறிப்பு என்று கூறப்படும் “யாழ்” பத்தியின் தொடக்கத்திலேயே வெளிப்பட்டு நிற்றலை நோக்குக. “மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன், விலங்குகளின் தோலை மரங்காளிற் காயப்போட்டு வைத்தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் உராயும்போதெல்லாம் ஓர் ஒலி எழக் கேட்டான். அதைப் பற்றி எண்ணினான்; தோற் கருவிகள் தோன்றின.” - தமிழண்ணல். இப்பத்தியில் “தோற் கருவிகள்” என்னும் குறிப்பு இறுதியில் நிற்றலை நோக்குக. “மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன், விலங்குகளின் தோலை மரங்களிற் காயப்போட்டு வைத்தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் உராயும்போதெல்லாம் ஓர் ஒல எழக் கேட்டான். அதைப் பற்றி எண்ணினான் தோற் கருவிகள் தோன்றின.” - தமிழண்ணல். இப்பத்தியில் “தோற் கருவிகள்” என்னும் குறிப்பு இறுதியில் நிற்றலை நோக்குக. |