170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கொச்சை நடை: இலக்கண அமைப்பின்றி இழிவழக்குகள் புணர்த்து, எல்லாச் சொல்லும் விரவிவர எழுதப்படுவது. இது மாணக்காரல் வெறுத்தொதுக்கப்பட வேண்டியதாகும். “காலம்பறவே கண்ணால வூட்டுக்குப் போனான். நாஷ்டாவை முடிச்சுக்கிட்டு பேஷா ஒரு தூக்கம் போட்டான். மறுபடியும் மத்தியானச் சோறு துன்னப் பொறப்பட்டுப் பூட்டான்.” களவியல் நடை: “அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது. செல்ல, பசி கடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாம் கூவி, ‘வம்மின்;யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என்தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கறிந்த வாறுபுக்கு, நாடு நாடாயினஞான்று என்னை உள்ளி வம்மின், என்றான்.” -இறையனார் களவியல். செய்யுள் நடை : இஃது எதுகைத் தொடை அமையவும், அருஞ்சொற்கள் புணர்த்தும், புணர்ச்சி இலக்கணம் வழுவாதும் எழுதப்படுவது. “வடவாரிய மன்னராங்கோர் மடவரலை மாலைசூட்டி யுடனுறைந்த விருக்கை தன்னி லொன்றும்மொழி நகையிராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழு மிமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல் பொறித்த நாளெம்போலும் முடிமன்ன ரீங்கில்லை போலும் என்ற வார்த்தை!” (உரைப்பாட்டு மடை) - சிலப்பதிகாரம். இலக்கிய நடை : இஃது அருஞ்சொற் புணர்த்தும், புணரியல் வழுவாதும் எழுதப்படுவதாகும். “ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமை நீங்க நித்தவநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதின் மாலைய வாகிய இம்மை மறுமையின் பங்களினு வர்ப்பு, பிறவித் துன்பங் களும் தோன்றும், அவiதோன்ற வீட்டின் கணாசையுண்டாம், அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனின் முயற்சிக ளெல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோக முயற்சியுண் டாம், அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய என |