238 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
4. புரட்சிக்குயில் பாரதிதாசன் (கி.பி. 1891 - 1964) ‘தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!’ இந்த அமுதப் பாடலைப் கேளாச் செவிகளே இல்லை என்று துணிந்து கூறலாம். பாடிப்பாடிச் சுவை காணும் வாய்கள்தாம் எத்தனை! எத்தனை! ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்னும் வெற்றிச் சங்கின் வீரமுழக்கத்தையும் மேடை தோறும் கேட்டுக்கேட்டு, உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட நெஞ்சங் களைத்தாம் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? பாடல்கள் நன்றாகத் தெரியும்; ஆனால் அந்தப் பாடல்களைத் தந்த மாபெருங் கவிஞர் யார்? எத்தனை மாணவர் அறிவர்? இன்று தமிழ் நாடெங்கணும் பாட்டரங்கங்கள் சிறந்த முறையில் நிகழ்ந்துவருவதை, நாளெல்லாம் கண்டு களிக்கின்றோம். அந்த அரங்கங்களில் பாமழை பொழிகின்ற பாவலரின் எண்ணிக் கையை அளவிட்டுச் சொல்ல முடியாது. அந்தப் பாவலர்களுக்குப் பாட்டு வெறி ஊட்டியவர் யார்? ஒரு பெரும் பாவலர் பரம்பரையே உருவாவதற்குக் காரணமாக - வழிகாட்டியாக நின்ற பாவலர் யார்? அவர்தாம் பாவேந்தர் பாரதிதாசன். தமிழர்தம் நெஞ்சமெல்லாம் தளிர்த்து வளரத் தமிழ்முதல் வார்த்து, தமக்கென ஒரு பரம் பரையைத் தோற்றுவித்து, எழுச்சிப் |