முன்னுரை தமிழகஅரசின் புதிய பாடத் திட்டடத்தின்படி இவ்விலக்கண நூல் பதினோராம் வகுப்பிற்கு எழுதப்பட்டுள்ளது; மாணவர்க்கு ஏற்ற வகையில், எளிதிற் புரிந்து கொள்ளுமாறு விளக்கி எழுதப் பட்டுள்ளது. கட்டுரையும், மொழிப்பயிற்சியும் இதனுடன் இணைக்கப் பட்டுள்ளன. பதினோராம் வகுப்பு மாணவர்க்கு இந்நூல், இலக்கணத் துணைவனாக மட்டுமின்றிக் கட்டுரை நண்பனாகவும், மொழிப் பயிற்சி ஆசானாகவும் நின்றுதவவல்லது. இந்நூல், நல்ல முறையில் உருவாகத் துணை செய்த புலவர் ஆ. பழநி, ந. சக்திவேல், B.A.,B.T. வித்துவான் இராம. சிதம்பரம் ஆகிய மூவர்க்கும் நன்றி செலுத்துங்கடப்பாடுடையேன். இந்நூலைத் தமிழகத்துப் பள்ளிகளில் உலா வரச் செய்யும் ஆசிரியப் பெருமக்கட்கு என் உளங்கனிந்த நன்றி. காரைக்குடி இங்ஙனம், 11.12.1967 ஆசிரியர். |