பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

1
எழுத்து

1. எழுத்துக்களின் பிறப்பு - இடம், முயற்சி

(பிறப்பின் பொதுவிதி)

“அகர முதல வெபத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.”

எழுத்துக்களுக்கு ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இரண்டு உண்டு. நாம் இங்கு எழுத்துக்களின் ஒலி வடிவம் பற்றிய பொதுப் பிறப்பைக் காண்போம்.

மேலே உள்ள திருக்குறளைப் பன்முறை நன்றாக வாய்விட்டுப் படியுங்கள். அங்ஙனம் படிக்கும்பொழுது, அக்குறட்பாவில் உள்ள எழுத்துக்களின் ஒலிகளைச் செவி சாய்த்துக் கேளுங்கள். ஒவ்வொரு எழுத்தும் ஒலி வடிவம் பெறும்பொழுது, ஒன்றற்கொன்று ஒலிய மைப்பில் வேறுபடு வதை உணர்வீர்கள்.

அக் குறட்பாவில் உள்ள அ-த்-ன்-ல் என்ற எழுத்துக் களைத் தனித்தனியே ஒலித்துப் பாருங்கள்.

உயிரெழுத்தாகிய என்பது, கழுத்தைப் பிறப்பிட மாகக் கொண்டு, வாய் திறத்தலாகிய முயற்சியினால் பிறப்பது தெரிய வரும்.

வல்லின மெய்யெழுத்தாகிய த் என்பது மார்பைப் பிறப்பிட மாகக் கொண்டு, மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கு நுனி பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும்.

மெல்லின மெய்யெழுத்தாகிய ன் என்பது மூக்கைப் பிறப்பிட மாகக்கொண்டு, மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும்