பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

பொருள் உணர்த்தும் சொற்கள், இசைநிறை, அசைநிலை, குறிப்பால் பொருள் தரும் சொற்கள் என எட்டுவகையினவாய் வரும்.

இவ்விடைச்சொற்கள், பெயர்ச் சொற்களுமாகாமல் வினைச் சொற்களுமாகாமல், அவற்றின் வேறுமாகாமல் இடை நிகரனவாய் நிற்றலாலும், பெயர் வினைகளின் இடமாக நடத்தலினாலும் இடைச்சொற்கள் எனப்பட்டன.

(1) வேற்றுமை உருபுகள்: ஐ-ஆல்-கு-இன்-அது-கண் என்ற வேற்றுமை உருபுகள் இடைச் சொற்களாகும்.

(2) வினை உருபுகள்: (இடைநிலைகள்-விகுதிகள்) த்-ட்-ற்-இன் போன்ற இடைநிலைகளும், அன்-ஆன்-அள்-ஆள் போன்ற விகுதிகளும் இடைச் சொற்களாகும்.

(3) சாரியைகள்: அற்று-அத்து-அன்-ஆன்-அம்-இன் போன்ற சாரியைகள் இடைச்சொற்களாகும்.

(4) உவம உருபுகள்: போல - புரைய - ஒப்பு - உறழ என்பன போன்ற உவம உருபுகள் இடைச்சொற்களாகும்.

(5) தத்தம்பொருள் உணர்த்தும் சொற்கள்: ஏ-ஓ-உம்-கொல்-தான்-மன் என்பன போலத் தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்களாகும்.

(6) இசைநிறை: ஏஎ-ஓஒ என்பன போலத் தமக்கென்ப பொருளின்றிச் செய்யுளின் ஓசையை நிறைக்க வரும் இசைநிறைகள் இடைச்சொற்களாகும்.

(7) அசைநிலை: கொல் - ஆல்- ஏ- ஓ- அரோ என்பன போல, வேறு பொருளின்றி அசைநிலைப் பொருளில் வரும் அசைநிலைகள் இடைச்சொற்களாகும்.

(8) குறிப்பால் பொருள் தரும் சொற்கள்: கோவென, சோவென, கடகடென, படபடென என்பன போல ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும், துண்ணென, திடுக்கென என்பன போல அச்சக் குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும், பொள் ளென, பொருக்கென என்பன போல விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும் இடைச் சொற்களாகும்.

(1)ஊரை அடைந்தான்
ஊரை (ஊர்+ஐ+ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.