பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

வைத்திருந்தனர். அதிற் சில மாற்றங்கள் செய்ய வேண்டி, 1976 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 7,8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தனர்.

இலக்கணப்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை தலைமையில் கூட்டம் நிகழ்ந்தது. தில்லியிலிருந்த நம் தமிழ்ப் பேராசிரியர்கள், சில மாற்றங்கள் கொடுத்திருந்தனர். சிலவற்றை மாற்றிக் கொடுத்தேன். சிலவற்றை மாற்ற இயலாதென்று கூறிவிட்டேன். ‘தமிழ் நாட்டுக்க விஞர்கள் மட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர். வடநாட்டுக் கவிஞர் இடம் பெறவில்லை’ என்ற குறிப்பொன்றிருந்தது.

என்ன ஐயா! வேடிக்கையாக இருக்கிறது? அந்தந்த மாநிலங் களில் அந்த அந்த மொழிக் கவிஞர்களைப் பற்றி யெழுதுவது ஒரு குறையா? என்றேன். ‘வடநாட்டில் நம் ஒளவையைப் பற்றி எவனாவது எழுதச் சொல்லியிருக்கிறானா? நம்ம மடையன் தான் இப்படியெல்லாம் சொல்லுவான்’ என்று வருத்திக் கூறினார் வேணுகோபாலபிள்ளை. கைநடுங்க நா நடுங்கப் பேசிய அவ்வளவு பெரிய முதியவர், இக்கடுமையான சொல்லைப் பயன் படுத்தினார் என்றால் அவர் மனம் எவ்வளவு புண் பட்டிருக்க வேண்டும்!

தமிழன் அடிமையாகவே இருந்து, பழகி இன்பங் கண்டவன். ஆனால் இன்னும் அடிமையாகவே இருக்க விழைகிறான். சொன்னால் விரிந்த மனப்பான்மை என்பான். தமிழ் மாநிலத் தானுக்கு மட்டுந்தான் ‘விரிந்த மனப்பான்மை’ வேண்டுமோ? ஏனைய மாநிலத்தானுக்கு மட்டும் ‘சுருங்கிய மனப்பான்மை’ இருக்கலாமோ? எது விரிந்த மனம்? சுருங்கிய மனம்? என வேறு பாடறியாதவன் தமிழன்!

எட்டாந்தேதி கூட்டத்திற்குச் செல்லவேண்டும்; ஆனால், நான் கலைஞர் இல்லத்திற்குச் சென்றுவிட்டேன். நுழைந்ததும் திகைத்துப் போனேன். எந்நேரமும் நெருக்கடியாகவே அவ்வில்லம் பொலியும். நான் சென்ற பொழுது அம்மனையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. பொலிவிழந்து நிற்கக் கண்டேன். நெருக்கடி (எமர்ஜென்சி) அரசு இருந்தமையால் இங்கே நெருக்கடி இல்லை.

அப்பொழுது கலைஞர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்றும் போல் மலர்ச்சியாகத்தான் இருந்தார். வணக்கம் என்றேன். வணக்கம், வாருங்கள், எப்பொழுது வந்தீர்கள்? என்றார் கலைஞர். இரண்டு நாள் ஆகிறது என்றேன். வண்டியில் ஏறுங்கள் பேசிக் கொண்டே