பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 173 |
'தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் வெளியிடப் பட்ட 'மனிதனைத் தேடுகிறேன்' என்ற தங்களின் நன்னூல் எங்கள் பார்வைக்குக்கிட்டியது. நாகரிகம் என்ற பெயரால் இன்றைய சமுதாயம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்தத் தங்களின் நூல் ஒரு அவசியத் தேவையாகும். காலம் அறிந்து தாங்கள் எழுதியுள்ள இந்நூல் நம்மவர் அனை வரும் படித்துத் திருந்திடப் பெரிதும் உதவும். கு.செந்தில் குமார். சலகண்டபுரம் -8-7-86 'தங்கட்குக் கவிவரம் பிறப்பிலே உண்டான திரு-கருவின் திரு என்பதை இந்தப் புதுப்படைப்பு எடுத்தோதுகின்றது'....... 'காவியப்பாவை' கிடைத்தனள். வலிமையான நல்ல நூல். மிக எளிய முறையில் அரிய பெரிய கருத்தைத் தெரிவிக்கும் ஆற்றல், தங்கள் பால் கருவிலே உண்டான திரு. பார்த்ததும் பெரிதும் வியந்தேன்... 'மறவர் நாடு - என்பதைப் படித்தேன்' அப்பாடல் பழம் வரலாற்றுப் பிழிவு. தாங்கள் தமிழ் நாட்டுக்குரியவர். தமிழுக்குரியவர். இறைவன் நம்மைத் தாங்குவாராக. பசுமலைமுனைவர்.வீ.ப.கா.சுந்தரம், இசைத் தமிழ் ஆய்வுப்பேரறிஞர் 'இத்திங்கள் குறளிய ஏட்டில்,'ஊது மறவா ஊது' என்ற பாடலில், 'சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல், சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று - கொம்பூதி கொம்பூது மறவா' எழுதியிருந்த வீர வரிகள் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே உள்ளன. வெறும் புகழ்ச்சியில்லை; மிகையில்லை முற்றிலும் உண்மை'. ஈரோடுபுலவர் தி.மு.அரசமாணிக்கம் 25.9.87 ஆசிரியர். |