பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

தேமதுரக் கவியிவரைத் தன்பால் ஈர்த்தார்
ஆமதுவே முடியரசன் போக்கை, வீழ்ந்த
சமுதாயத் தின்மேலே போக்கிற்றாங்கே!

எதையுரைக்க, எதைவிடுக்க? ஆதி நாளில்
கலப்புமணங் கொண்டானே அதையா? பின்னர்
அதைப்போன்றே தன்மக்கள் அனைவருக்கும்
செய்வித்தா னேஅதையா? வந்த இந்தி
அதைஎதிர்த்துத் ‘துணைவியோடு சென்றதையா?
ஆசானாய் ஆல்போல விரிந்த தையா?
கதையல்ல, எல்லாமே கவிஞன் வாழ்ந்து
காட்டியவை; ஆம்எடுத்துக் காட்டு வாழ்வு!

பொன்வையைச் சங்கத்துப்புலவர் பாட்டே
பாட்டாகும் என்றுரைக்கும் இவரோ, சொந்தக்
கண்ணைப்போல் தமிழ்த்தாயைப் பாட்டால் காக்கும்
கருத்துடைய வலுவுடைய காவற் காரர்;
கண்மூடித் தூங்குகையில் கனவின் போதும்
கவிபாடும் இவராற்றல் வியப்பே! எண்ணித்
தன்னைமறிந் தோருலகில் தோய்ந்து நிற்கும்
தமிழ்க்கவியாம் முடியரசன் இளைஞர் வாழ்க!

மணிவிழாவை முன்னிட்டு இலக்கிய அணிச் செயலர் ச.அமுதன் 26-10-80 இல் முரசொலியில் எழுதிய வாழ்த்து.

பெரியாரின் தோட்டத்தில் பூத்திட்ட புதுமலரே
பாவேந்தர் வழித்தடத்தைப் பாட்டோர்க்குக் காட்டிவரும்
பாண்டித் திருநாட்டின் பாவரசே! பண்பரசே!
மூத்த தமிழுக்கு முறையாகக் கிடைத்திட்ட
மூத்தோனே, முடியரசே!

மணிவிழாக் காணுகின்ற மரபுவழிக் கவிவேந்தே!
முத்துத் தமிழெடுத்து முழுநிலவின் தண்மையினை
மணிமுத்துக் கவிதைகளில் மானவழி மாற்றாமல்
மனம்பதியத் தந்தவனே!, பிழைப்புக்குப் பாடாமல்
பிறந்திட்ட மண்ணுக்கும் பெற்றதமிழ் அன்னைக்கும்