| 184 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
பூங்கொடி படைத்த ஓங்குபுகழ்ச் செம்மால்! பூங்குன்றன் அன்ன உயர்தமிழ்ப்புலவ! செஞ்சொற் பாட்டாம் அஞ்சலார் பாட்டு நெஞ்சிற் கொஞ்சி நாளும் நிற்கிறது. எண்ணில் நூல்கள் வண்ணமாய் இயற்றிய கண்ணிய மிக்க கவினார் அண்ணலார் அறநெஞ் சுடனே குறளியம் தன்னில் மறமிகும் ஆட்சிக் கறைபடி கையர்க்கு ‘பொய்த்த வாய்மொழி போதும் போதும் மெய்யாய்ப் புகல்வன் மெய்ஞ்ஞானத் தமிழினைக் கைதவத்தீர் கைவைத்தீரேல் நைவீர்’ நைவீர்’ என்றே அறைந்தீர் நன்றே புவியரசு போற்றும் முடியரசன் நீர்தாம் புவிபோற்ற நூறாண்டு புகழுடன் வாழியே’ -இர. திருஞானசம்பந்தம் ‘தமிழ் என் மனைவி’ என்னும் என் பாடலைத் தமிழில் வெளியிடவும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவும் தேசியப் புத்தகக் குழு (NATIONAL BOOK TRUST INDIA) என்னிடம் ஒப்புதல் பெற்றது. ‘குடும்பம் ஒரு காவியம்’ என்ற எனதுபாடலைத் தமிழில் வெளியிடத் தென்னிந்திய மொழிகள் புத்தகக்குழு (SOUTHERN LANGUAGES BOOK TRUST) என் இசைவு பெற்றது. ‘மனத்தூய்மை’ என்னும் தலைப்புடைய என் பாடலைத் தமிழில் வெளியிட சாகித்திய அகாதெமி (SAHITYA AKADEMI) என்பால் இசைவு பெற்றது. என்நூல்கள் பற்றிப் பல பெருமக்கள் திறனாய்வு செய்துள்ளனர். இலக்கிய வரலாறுகளில் குறிப்பிட்டுள்ளனர். இதழ்கள் பல, மதிப்புரைகள் எழுதியுள்ளன. எனக்குக் கிடைத்தவற்றுட் சில ஈண்டுத்தரப்படுகின்றன. 4-12-54இல் வெளிவந்த ‘தென்றல்’ ஏட்டில் செவ்வி (பேட்டி) கண்டு எழுதிய கட்டுரையொன்று வெளிவந்தது. கண்டு எழுதியவர் |