| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 189 |
பிண்டப் பிரமாணமாக இல்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதுதான் அவருடைய தனிச் சிறப்பாகும். காதல் வாழ்வின், மனை வாழ்வின், குழந்தை ஈன்ற கூட்டு வாழ்வின் மாண்பு மிக்க அம்சங்களைப் பண்பு குலையாது நமக்கு எடுத்துக் காட்டியிருப்பது அவருடைய பண்பினை நன்கு எடுத்துக் காட்டுகிறது. கவிதை சம்பந்தப்பட்டவரையில் பாரதிதாசன் பரம்பரையைச் சார்ந்தவர். அரசியல் சம்பந்தப்பட்டவரையில் இவர் தி.மு.கவைச் சார்ந்தவர். தி.மு.க. என்னும் கானல் நீரை நம்பித் தனது வேட்கை யைத் தணித்துக் கொள்ள அவரது நெஞ்சம்தாவித் தாவிச் சென்றாலும் அவரது சிந்தனை யோட்டங்களின் வெள்ளப் பிரவாகமெல்லாம், பல சந்தர்ப்பங்களில் ஒரு மனிதாபிமான நிலையில் கவிஞனின் உணர்வோடுதான் செயல்பட்டிருக்கிறது. பாரதி வெளிச்சத்தில், பாரதிதாசன் வழியில் ‘தமிழில்தான் சகலமும்’ என்னும்தாரக மந்திரத்தைத் தூக்கிப் பிடித்து நிற்பவர். இந்தியோ கன்னடமோ ஆங்கிலமோ எதைப் பற்றியும் கவலை யில்லை. ‘என்னுடைய தமிழ் சகல துறைகளிலும் உரிய அந்தஸ்தைப் பெறவேண்டும்’ என்றே அவருடைய மனசாட்சி இந்தப் பகுதியில் முழங்குவதைக் காணுகிறோம். தமிழை நன்கு கற்றுத் தெளிந்தபின் பிற மொழிகள் யாதாகினும் தெரிந்து கொள்வதில் பிழை இல்லை என்று கூறுவதையும், தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிகள் நாட்டாண்மை செய்வதைக் கண்டு மனம் வெதும்புவதையும் பார்க்கிறோம். .............. ‘தமிழே இந்தநாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்’ என்று உறுதியாகத் தமிழ்தான் தமிழ் மாhநிலத்தில் அரசு புரிய வேண்டும் என்பதை ‘டான்’ என்று அந்த முகாமில் இருந்து ஒருவர் கூறுகிறார் என்றால், விருப்பு வெறுப்பற்ற முறையில் மொழியை அணுகும் முடியரசனின் முற்போக்கு நிறைந்த மனிதாபிமானத் தன்மையைப் போற்று வதில் பொருள் இருக்கிறதல்லவா? |