பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மு.அருணா சலம்பிள்ளை அவர்கள் எழுதிய மடல்.

'நமது காவியப் பாவையைக் கண்டு களி கூர்ந்தேன். நம் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர் முதல் செந்தமிழ்ப் புலவர் ஈறாகவுள்ள பலரும் படித்துச் சுவைத்துப் பாராட்டற்குரிய பல்வகைக் கருத்துகள் செறிந்த இன்னிசைப் பாடல்கள் ஏந்தி வந்துள்ளாள். ஒவ்வொரு பாடலும் உள்ளத்தைத்தன் பாலீர்த்து உணர்ச்சி யூட்டா நிற்கிறது. இப்பாவைமகள் தமிழ் நாடெங்கணும் தடை யின்றிச் சென்று எல்லோரையும் இன்புறுத்துவாளாக.

- மு.அருணாசலம் பிள்ளை 6-10-55

'வாரச் செய்தி' என்னும் ஏட்டில் வந்த மதிப்புரை:

'கவிஞர் முடியரசன் தரும்விருந்தாகிய 'காவியப்பாவை' தமிழிசையை வலியுறுத்தும் நோக்குடன் ஆசிரியரின் கருத்து அமைந்திருப்பதற்கு ஒரு செயலாக்கமாகத் திகழ்கிறது.. இந்நூல் மூலம் தமிழுக்கும் தமிழிசைக்கும் தொண்டு செய்ய முன்வந்த கவிஞரைப் பாராட்டுகிறோம். -எழில்

'சுதேசமித்திரன்' நாளேட்டில் வந்த மதிப்புரை:

'தாய்நாட்டிடத்தும் தமிழ்மொழியிடத்தும் உள்ளம் பறி கொடுத்த ஆசிரியரின் ஆசையும் ஆவேசமும் பொங்கும் பாடல் களின் தொகுதி இந்நூல் (காவியப்பாவை). திருக்குறளை 'ஒரு நூல்' என்னுந்தலையங்கம் கொடுத்து அதன் பெருமையைக் கவிஞர் பாடுகிறார். 'வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும் திருநூல், பண்பினைத் தருநூல் உலகில் ஒரு நூல்' எனும் வரிகள் திருக்குறளின் உண்மை இயல்பை உரைக்கின்றன..... தமிழிசையில் ஆர்வமுள்ளார் காவியப் பாவையை ஆவலுடன் வரவேற்பர் - சொக்கன்

இனி பூங்கொடிக் காப்பியம் பற்றி வந்த மதிப்புரைகளைக் காண்போம்

'தமிழ் நாடு' 19-10-65இல் எழுதிய மதிப்புரை: