பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 261 |
அவர் கூறிய மொழிகள்: ‘அடுத்த தெருவில் ஒரு தமிழன் அடிபடு கிறான் என்றால் இந்தத் தெருவில் உள்ள தமிழன் துடித்துக் கொண்டு ஓட வேண்டாமோ? ஓடி உதவி செய்ய வேண்டாமோ? அதல்லவா இனவுணர்வு! இப்போது எவன் ஓடுகிறான்? எங்கே ஓடுகிறான்? வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே போகிறான்!’ இம்மொழிகளை மனம் நொந்து கூறினார் கவிஞர். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள், புதுக்கோட்டை, திருக்குறட் கழகத் தலைவர் அண்ணல். பு.அ.சுப்பிர மணியனார்க்கு மணிவிழா நடைபெற்றது. அண்ணார் அவர்கள் ‘கல்வித் தொண்டே கடவுள் தொண்டு’ என்ற குறிக்கோள் வாழ்வினர்; குறள் நெறி வழுவாச் சான்றோர், புலவர் பலர்க்கும் கவிஞர் சிலர்க்கும் சடையப்ப வள்ளலாக விளங்கியவர். இவர்தம் பொருட்கொடையாற் பயின்று முன்னேறியோரும் அவரணைப் பால் வாழ்வு பெற்றோரும் கூடி அண்ணலார்க்கு மணிவிழா வெடுத்து மகிழ்ந்தனர். விழாவில் தமிழகத்துச் சான்றோர் பலரும் கவிஞர்களும் அறிவு விருந்தளித் தனர். ஓர் இலக்கிய மாநாடென்று சொல்லும்படி, விழா அவ்வளவு சிறப்புற நிகழ்ந்தது. அவ்விழாவில் கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குமாறு பாவேந்தரை வேண்டினோம். தலைமையுரை கவிதை வடிவில் அமைதல் வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம். கவிஞரும் ஒப்புதல் அளித்துவிட்டார். கவியரங்கில் நானும் பங்கேற்றேன். அறிக்கைகள் சுவரொட்டிகள் வெளியிடப் பட்டன. முதல்நாள் இரவு ஒரு குழப்ப நிலை உருவாகிவிட்டது. பேரறிஞர் அண்ணாவைப் பற்றிப் பாவேந்தர், தமது தாளி கையில் தரக் குறைவாக - இழிமொழிகளால் தாக்கியெழுதி யிருந்தார். அதைப்படித்த புதுக்கோட்டைத் தோழர்கள் கிளர்ந் தெழுந்து விட்டனர். பாவேந்தர்க்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவதென முடிவும் செய்துவிட்டனர். இச்செய்தி என் செவிக்கெட்டியது. அண்ணாவைப் பற்றி அவ்வளவு இழிவாக எழுதியிருந்தது எனக்கும் வேதனைதான். எனினும் பாவேந்தர்க்கு எதிர்ப்பு நிகழ்ந்துவிடக் கூடாதே என்றஞ்சித் தோழர்களிடம் ஓடிச் சென்று கெஞ்சினேன். தோழர்கள் சினம் அடங்கவில்லை. இறுதியாக ஒன்று சொன்னேன். அண்ணலார் யார்? அனைவராலும் மதிக்கத்தக்க சான்றோர். திருக்குறள் கழகத்தாலும் அவர் தம் தொண்டாலும் புதுக் |