| 38 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
ஒருவர் கூத்தப்பன் என்னும் பெயருடையார். மற்றவர் சிகாகிரீசு வரன் என்னும் பெயரினர். முன்னவர் தமிழ்ப் புலவர் குடும்பத்தைச் சார்ந்தவர். பின்னவர் வடமொழிப் புலவர் மகன். ஒரு நாள் நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, சிகாகிரீசுவரன், கூத்தப்பனை நோக்கி ‘ஏங்காணும் உமக்கு இந்தப் பாஷைத் துவேஷம்? நடன சபாபதி என்ற அழகான சமஸ்கிருதப் பேரைக் கூத்தப்பன் என்று மாற்றி வெச்சுன்டீர்; இது நன்னாயிருக்கோ?’ என்று சொல்லி விட்டார். கூத்தப்பன் மறு மொழி கூறுமுன் நான் வெகுண்டெழுந் தேன். “ஏண்டா! எதுடா துவேஷம்? தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நீ குடுமியான் மலையப்பன் என்ற நல்ல தமிழ்ப் பெயரை, சிகாகிரீஸ் வரன் என்று மாற்றிக் கொண்டது துவேஷமா? தமிழன் தன் தாய் மொழியில் பெயர் வைத்துக் கொள்வது துவேஷமா? உன் புத்தியைக் காட்டி விட்டாயே. தமிழைத் துவேஷிக்கிற நீ எங்கள் மீதே பழியைப் போடுகிறாயே!” எனச் சீறியெழுந்தேன். “சார் சார், சும்மா தமாஷாப் பேசினதை இவ்வளவு பெரிசா எடுத்துண்டேளே” என்று நடுங்கி விட்டான் அவன். இப்படித்தான் வேடிக்கையாகவும் வினையாகவும் தமிழனை அழுத்திக் கொண்டிருக்கிறார்கள். கெஞ்சினால் மிஞ்சுவது; மிஞ்சினால் கெஞ்சுவது- என்பது அவர்களுக்கு இயல்பாகி விட்டது. தமிழ் மன்ணுக்கு உரிமை பூண்ட ஒரு தமிழன் தமிழ் என்று சொன்னால் ‘பாஷைத் துவேஷம்’ என்று பழிதூற்றுவர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு வேண்டாம்; என்னைத்தாழ்வாக எண்ணாதே; சரிநிகர் சமமாக வாழ்வோம் என்றால் ‘ஜாதி துவேஷம்’ என்று பறை சாற்றுவர். பகுத்தறிவு வேண்டு மென்றால் ‘பகவத் துவேஷம்’ என்று கதை மாற்றுவர். அதை நம்பித் திரியும் தமிழனும் இருக்கின்றானே. எது சரி? எது தப்பு? என்று சிந்தித்து நோக்கும் ஆற்றலை யிழந்து விட்டானே தமிழன்! யார் ஏமாற்றுகிறார்கள்? யார் ஏமாறு கிறார்கள்? என்பதும் தெரியாமல் வாழ்கிறானே! அவனை க்கி உயர்வு கொள்ளும் அயலான் பசப்பு மொழிகளை நம்பி நம்பிப் பாழ்படுகிறானே! புதியதோர் உலகு காண, தமிழ் நாடு உலகோடு சமமாகத் தலை நிமிர்ந்து வாழ, புதுமையும் பொதுமையும் |