பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. என் தேர்வு எண்ணும் வெளியாகியிருந்தது. வெற்றி பெற்ற மகிழ்ச்சி யுடன் அறிவழகனிடம் விடை பெற்றுக் கொண்டு, மேலைச் சிவபுரிக்குப் புறப்பட்டு விட்டேன். வழியில் மயிலாடுதுறையில் எனக்கு வேண்டியவர் வீட்டிற் சில நாள் தங்கியிருந்தேன். சென்னையை விட்டுப் புறப்படுமுன் அங்குள்ள முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளிக்கு, தமிழா சிரியர் பணி வேண்டி விண்ணப்பித்து வந்தேன்.