60 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
பூச்சக்கரவர்த்தி என்ற மாணவன் எழுந்து, ‘நாங்கள் செல்லவிட மாட்டோம். மறியல், செய்து தடுத்துவிடுவோம்’ என்று ‘ஓ’ வென்று அழுது விட்டான். மற்ற மாணவரும் அழுது விட்டனர். பொங்கி வந்த உணர்ச்சி என்னையும் பேச விடாது தடுத்து விட்டது. சிறிது நேரம் அமைதி. பின்னர் என் நிலைமையை விளக்கிக் கூறிய பின்புதான் இசைந்தனர். அன்புப் பிழம்பாகிய அம் மாணவர்களை நினையுந்தோறும் என் உள்ளம் பூரிக்கிறது. இத்தகு மாணவச் செல்வங்கள் வாய்த்தமையை எண்ணியெண்ணி இன்றும் மகிழ்கிறேன். மற்றொரு நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகிறது. காரைக் குடியில் ஆசிரியர் பணியேற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின், சென்னைக்குச் சென்ற நான் தாம்பரத்தில் இறங்கி, மின் வண்டியில் ஏறினேன். ஒரே கூட்டம்! நிற்கவும் இடமில்லா நெருக்கடி. கருப்புக் குப்பாயத்தைக் கையில் தொங்க விட்டுக் கொண்டு அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த ஓரிளைஞர் எழுந்து ‘ஐயா, உட்காருங்கள் உட்காருங்கள்’ என வற்புறுத்தினார். நன்றி, நான் நிற்கிறேன். நீங்கள் அமருங்கள்’ என்று நான் சொல்லியும் கையைப் பற்றி அமர்த்தி விட்டார். இளைஞர் மனப்பாங்கை என்னுள் வியந்து கொண்டேன். ‘ஐயா! என்னைத் தெரிகிறதா?’ என்றார் இளைஞர். நான் விழித்தேன்; யாரென்று சரியாகத் தெரியவில்லையேயென்றேன். ‘உங்கள் மாணவன்தான்; முத்தியாலுப் பேட்டைப் பள்ளியில் படித்தேன்; வக்கீலாத்துக் குழந்தை! இங்கே வாடா? என்று என்னை அழைப்பீர்கள்’ என்றார். அவர் சொல்கிற பொழுது வகுப்பறையில் பார்த்த அந்த முகம் தோன்றியது. அட! நீயா தம்பி! என்று அணைத்துக் கொண்டேன். என்ன செய்கிறாய்? என்றேன். ‘வழக்கறி ஞராகப் பணியாற்றுகிறேன்’ என்றார். ஆசிரியர் மாணவர் உறவு தந்தை மகன் என்ற முறையில் இருந்தது அன்று! இன்று ‘உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை’; ஒரோவிடங்களிற் பகையிருப்பதைத் தான் காண முடிகிறது! குற்றச்சாற்று ஒரு முறை தலைமையாசிரியர், என்னை அழைத்து, ‘வகுப்பில் இந்தி யெதிர்ப்புப்பிரசாரம் செய்கிறீர்களாமே?’ என்று வினவினார். “இல்லை” யென்றேன். ‘கல்வியமைச்சர் அவினாசிலிங்கனாரிட மிருந்து மடல் வந்திருக்கிறது’ என்று கூறினார். கையிலிருந்த பாடப் |