பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

அக் கடிதத்தில் கண்டபடி எக்கோ பொங்கலுக்கு முதல் நாள் சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவனை எல்லோரும் உள்ளன்புடன் வரவேற்றனர். மல்லிகாவின் தோழிகள் பலபேர் வந்திருந்தனர். எக்கோவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால். வந்தவர்களுக்குள் ஒருத்தி, 'மல்லிகா எழுத்தாளர் எக்கோவின் காதலி; இனிமேல் அவளுக்கென்னடி குறைச்சல்! அவள் பேனா முனையில் நடனமாடும் மயில்' என்று கேலி செய்தாள்.

மற்றொருத்தி 'நடனம் ஆடும் மயில் அல்லடி அவள், போராடும் புலி!' என்றாள்.

இவ்வாறு அன்றிரவு வேடிக்கையும் கேளிக்கையுமாகக் கழிந்தது.

காலைக் கதிரவன் செவ்வொளி வீசிக்கொண்டு தோன்றினான். அந்தத் தோற்றம், மக்கள் உரிமைக்குப் போரிட்டு இரத்தந் தோய்ந்த உடலுடன் தோன்றும் வீரனைப் போலக் காட்சியளித்தது. எக்கோவிற்கு அவன் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் மோதி மோதிப் புரண்டு கொண்டிருந்தன.

'எழுந்து வாருங்கள் குளிப்பதற்கு; விரைவில் குளித்து விட்டுப் புத்தாடையை உடுத்திக் கொள்ளுங்கள்; பொங்கலும் அதுவுமாக இன்னும் படுக்கையில்....' என்று அழைத்தாள் மல்லிகா.

'பொங்கல்! எனக்கா பொங்கல்! மக்களுடைய சமுதாயத்திலே நல்வாழ்வு - புதுவாழ்வு மலரவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருக்கும் நானா பொங்கல் விழாக் கொண்டாட வேண்டும்? என் மன அடுப்பிலே மூட்டி விடப் பட்ட புரட்சித் தீயால் என் இரத்தம் பொங்கிக் கொண்டிருக் கிறது. அதுவே போதும். எங்கு நோக்கினும் வறுமை, பொருளியல் அடிமை, சாதிமத அடிமை இவை குடி கொண்டிருக்கின்றன. மனிதன் வாழ்வதற்கு வீடின்றி, விலங் கொடு விலங்காய் வாழ்கிறான் - மடிகிறான். அறியாமை இருள் மூடிக் கவிந்து கொண்டிருக்கிறது. இக்கோரமான காட்சி யைக் கண்டு கொண்டு துடிக்கின்ற உள்ளத்திலே பொங்கலுக்கேது இடம்? 'புரட்சி' இதழில் என்னுடைய கட்டுரையைப் பார்க்க வில்லையா நீ? அவ்வாறு எழுதிய நான் விழாக் கொண்டாடு வதா? மனிதன் எப்பொழுது எல்லா உரிமையும் பெற்று மனித வாழ்வு வாழ்கிறானோ அன்றுதான் என் போன்றவனுக்கு விழா! அதற்காகக் பாடுபடுவதே என் முயற்சியாக இருக்கும். நீ வேண்டுமானால்