| 208 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
கொண்டிருந்த அரங்கசாமியும் ஓடினான். அதற்குள் பக்கத்திலிருந்த 'போலீசு' வந்து கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தது. சிலர் அவளைத் திட்டினார்கள். சிலர் காரோட்டியைப் பேசினார்கள். இன்னும் சிலர் 'அவள் விதி அவ்வளவுதான்' என்று வேதாந்தம் பேசினர். 'பிச்சைக்காரி தானே! போகட்டும், என்ன குடிமுழுகிப் போகிறது' என்று பேசிக்கொண்டனர் சிலர். அனாதையான - ஏழையின் உயிருக்கு உண்மையில் இரங்கு பவர்கள் எங்கேயிருக்கப் போகிறார்கள்? உயிரில் கூட, பணக்கார உயிர் - ஏழையின் உயிர் என்ற வேறுபாடு உண்டாகிறதே! துன்பம் பணக்காரனுக்கு ஒருமாதிரியும் ஏழைக்கு ஒருமாதிரியுமா வேதனை தருகிறது? எங்குத் துன்பம் தோன்றினாலும் மனிதன் என்ற முறையில் கண்ணோட்டம் செலுத்துவதுதானே மனிதத் தன்மை. ஆனால் அந்தத் தன்மைதான் மறைந்து போய்விட்டதே! 'போலீசு' தான் என்ன செய்யப்போகிறது? அவள் இறந்தாள். 'போலீசு' காரோட்டிக்குத் தண்டனை தரும்; அல்லது விட்டு விடவும் செய்யும்; ஆனால் அவளுக்குப்பின் அந்தக் குழந்தைக்குக் கண்காணிப்பு யார்? அதையல்லவா கவனிக்க வேண்டும்! கடைசியில் அதுவும் பிச்சையெடுத்துத் தான் வாழ வேண்டும்; அந்தக் குழந்தை யும் எதிர்காலப் 'பிரஜை'தான் இந்த நாட்டில்! இதைப்போல எத்தனையோ குழந்தைகள் திரிகின்றன. இங்கே இதையெல்லாம் கவனிப்பவர் யார்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த நாடு என்னாவது? பிச்சைக்கார நாடாகத்தானே ஆகும்! தனி மனிதன் வாழ்வுதானே கவனிக்கப்படுகிறது. சமுதாயத்தின் வாழ்வை அதன் போக்கைக் கவனிப்பது யார்? அதைக் கவனிக்காத நாடு என்றும் உருப்பட முடியாது; அந்த நாட்டின் எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும். அரங்கசாமி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 'ஐயோ! பாவம்! சிறுவயதுப் பெண்ணாக இருக்கிறாள். யாரோ அனாதை' என்று எண்ணிக்கொண்டே உருண்டு விழுந்த குழந்தையின் பக்கம் அவன் பார்வையைத் திருப்பினான். குழந்தை அழுது கொண் டிருந்தது. குழந்தை கையில் ஒரு பழைய 'மணிபர்சு' இருந்தது. அதை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். மேல்புறத்தில் சிறு புகைப்படம் ஒன்றும் இருப்பதைப் பார்த்தான். அவன் மனம் 'சுரீர்' என்றது. |