78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
10 வேர்ப் பலா காலம் மாறும்பொழுது அம் மாற்றத்துக்கேற்பக் கருத்து களும், கோட்பாடுகளும், பழக்க வழக்கங்களும் மாறி வருவது இயல்பு. அன்று முடியாட்சி கோலோச்சியது, காலம் மாறியது; இன்று, குடியாட்சிக் கொள்கை ஆட்சி செய்கிறது. ஆடவர் குடுமி வைத்திருந்த காலம் அன்று; முடியைக் கோலங்கள் பல செய்து அழகு காணும் காலம் இன்று. தாழ்குழலார் எனத் தையலார் பாடப்பட்ட காலம் அன்று; கூந்தலைத் தறித்து விட்டுத் தடவித் தடவிப் பார்க்கும் காலம் இன்று. மாணவர் மரத்தடியில் பாடங்கற்ற காலம் அன்று; கற்பதற்கு அவர்கள் மாளிகையில் புகுந்து வருங்காலம் இன்று. வீரத்தின் அறிகுறியாகப் புலிப் பற்றாலி கட்டி மணந்தான் அன்று. கடைத்தாலி வாங்கிக் கட்டுகிறான் இன்று. அதுவுமின்றி மணங்கள் நடைபெறுவதும் உண்டு. உடை மாறியது; உணவு முறை மாறியது; உறையுள் அமைப்பு மாறியது; பழக்க வழக்கங்கள் மாறின. இவ்வாறு, கால மாற்றத்துக்கேற்பத் தன் பழக்க வழக்கங் களை, கொள்கைகளை, எண்ணங்களை, கோலங்களை மாற்றிக் கொண்டவன்தான் மனிதன். ஆனால், மகளிர் முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் மாற்றங் களை ஏற்படுத்திக் கொள்வதில் மட்டும் தயங்குகின்றான். தயங் கினாலும் அவனுடைய விருப்பத்தையோ ஒப்புதலையோ எதிர் பார்த்துக் கொண்டிராமல், காலம் தன் பணியைச் செய்து கொண்டு தான் இருக்கிறது. இடைக்காலத்தில், பெண்களை அடிமையாக, அழகுப் பாவையாக, இன்பப் பொருளாக, அறியாமையின் கொள்கல மாகக் கருதி இயங்கி வந்தது குமுகாயம், அதற்குச் சமயம், சாத்திரம், அறியாமை முதலியன நல்ல அரண்களாக அமைந்தன. எனினும் |