பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

வாங்கப்படும். எங்களோடு வீதிப் பிள்ளைகளுக்கும் தெவிட்டும் மட்டும் கொடுக்கப்படும். பலூனா, பொம்மை களா, சிலேட்டு களா, நோட்டா, பென்சிலா எல்லாம் மொத்த மாக வாங்கப்படும். எங்களுக்கும் ஊர்ப் பிள்ளைகட்கும் விநியோகிக்கப்படும்.

எங்கள் கண் எதிரே எங்களின் ஐயா அவர்கள், ஊரில் தேள் கொட்டப்பட்டு வந்தவர்களையும் பாம்புக் கடிபட்டு வந்தவர்
களையும் காப்பாற்றியுள்ளார். யார் கவலைப்பட்டு, துன்பப் பட்டு வந்தாலும் அவர்கள் ஆபத்து, சங்கடங்கள் விலகும். நன்றியோடு விடை பெறுவார்கள். எவ்வளவோ நல்ல காரியங் களைச் செய்துள் ளார்கள் எங்கள் ஐயா.

எங்கள் ஐயா அவர்களின் தோற்றமும், பேச்சும் கம்பீரமாக இருக்கும். அந்த உண்மையான தேஜசான, கூர்மையான, கனிவான, நேர்மையான, தைரியமான கண்கள் தனித்தன்மை வாய்ந்தன. அவர்களின் முகத்தை நேருக்கு நேர் நோக்கும் தைரியம் யாருக்கும் வராது. இதற்கு ஒரு உதாரணம், எங்கள் ஐயா அவர்கள் எங்கள் ஆயாள் அவர்களையும், என் தயார் அவர்களையும், என்னையும் (நான் சிறு பிள்ளை 3 அல்லது 4 வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்) அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்குக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். இரயில் பயணம்.

அப்போது பாண்டிச்சேரி பிரான்சு ஆட்சியிலிருந்தது. அதனால் பயணிகளைச் சோதனை செய்து சுங்கவரி விதிப்பது செயல்பட்ட காலம். பாவேந்தர் வீட்டில் தங்கி இருந்தோம். எங்கள் ஐயாவும், பாவேந்தரும் பேசிக் கொண்டிருக்க, நான் என் தாயார் பாவேந்தரின் துணைவியார், அவர்களின் புதல்விகள் அனைவரும் பாண்டிச் சேரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.

பல தினங்கள் சென்று கானாடுகாத்தானுக்குத் திரும்பினோம். பாண்டிச்சேரியிலிருந்து ரயிலில் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், இரயில் நின்றது. சுங்கச்சாவடி சோதனை அதிகாரிகள் மற்ற எல்லாரையும், அவர்களின் பொருள்களையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள், எங்கள் ஐயா அவர்களைப் பார்த்தவுடன் எந்தச் சோதனையும் செய்யாமல், மரியாதை கலந்த மென்மையான சிரிப்பை, எங்கள் ஐயாவுக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு, மிடுக்குடன் மற்ற பயணிகளைச் சோதனை செய்யப் போய் விட்டனர்.

அடுத்த ரயில் நிலையம் வந்த பின், எங்கள் ஐயா எப்போதும் வைத்
திருக்கும் சின்ன வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் திறந்து,