122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
தினசரி பிரார்த்தனை, உத்தேச வருடம் 1926-ஐ அனுசரித்து இருக்கும். நானும் அண்ணனும் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது 5.30க்கு எல்லாம் எங்களை எழுப்பி விடுவார்கள். 6 மணிக்குத் தந்தையார், தாயார், அண்ணன், நான் ஆக நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து பிரார்த்தனை செய்வோம். அவையாவன:- 1.என் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இருப்பது என் மனப்பான்மைதான். 2.இன்பத்துக்கும், துன்பத்துக்கும் அடிமையாகிவிட மாட்டேன், எனக்கு வேண்டுவது எல்லாம், திடமான, மாறாத ஊக்கமே. 3.சுறுசுறுப்பும், உயர்வு தாழ்வு கருதாது வேலை செய்யும் குணமும் வேண்டும். 4.எண்ணங்கள் செயலில் வருமாறு செய்தலே உத்ஸாகமாக இருப்பதற்கு வழி. 5.சாவுக்கும் துணிந்துவிட்ட நான் என் வாழ்வில் நேரும், எந்த நிகழ்ச்சிகளைக் கண்டும் ஆணவமுறவும், பயப்படவும் காரணமே இல்லை. 6.அரசாங்கமே எனது வசப்படினும் ஆணவமுறேன். அவயவங்கள் இழக்கப்படினும் கவலையுறேன். உயிர் போயினும் உத்ஸாகம் குன்றேன். 7.எனது தவற்றை எனக்கு எடுத்துக்காட்டுவோரிடம் நன்றி செலுத்துவேன். வீணாகத் தூற்றுவோரைக் கண்டு இரக்கம் கொள்ளுவேன். 8.மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்காதவர்களுக்கு அச்சமும், சோர்வும் அவமானமும் வரா. மனச்சாட்சிக்குத் தொண்டு செய்யும் அடிமையாகி விட வேண்டும். 9.சோம்பல் அழிக, கவலை ஒழிக. அச்சம் அடியோடு மாய்க. 10.அன்பு பெருகி, அறிவு வளர எப்பொழுதும் முயல வேண்டும்! இதை ஒவ்வொன்றாகத் தந்தையாரவர்கள் கூற நாங்கள் மூவரும் அதை அப்படியே திரும்பக் கூறுவோம். கூறி முடித்த வுடன் |