பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

சமயப் பற்றினால் அரசர்களால் கட்டப்பெற்ற ஆலயங்களைப் புதுப்பிக்க ஆறுகோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது தனவணிக சமூகம். செலவிட்டவை கழித்து, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் சொத்துக்களைச் சத்திரம், மடம், விடுதி, வேத பாட சாலை, நந்தவனம், பசுமடம் போன்ற ஸ்தாபனங்களுக்கு ஒதுக்கி வைத்திருக் கிறது.

கன்னியாகுமரி முதல் காசி வரையும் அதற்கு அப்பால் நம்மவர் வாழும் வெளிநாடுகளிலும் இச்சொத்துக்கள் பரவி இருக்கின்றன.

நம் இந்து மதாபிமான சங்கம் நமது நண்பர்கள் மெ.ராம. மெ; ராய.சொ; அ.ராம.ராம; அழ. அருணாசலன்; பழ. வெங்கடாசலம் போன்ற பலரின் விடாமுயற்சியால் இன்று புத்துயிர் பெற்று நமக்கெல்லாம் பெருமகிழ்வு தந்து நிற்கிறது.

திருநாவுக்கரசர் கூறுகிறபடி,

"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு
நக்கு நிற்பன் அவர்தமை நாணியே!"

"கன்னெடுங் காலம்
    வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான்
    மறுக்கிலும் பஞ்சமுண்டுஎன்று
என்னொடும் சூள்அறும் அஞ்சல்நெஞ்
    சேஇமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றம்ஒன்று உண்டுகண்
    டீர்இப் புகல்இடத்தே."

"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற பாடல்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைக் கருதி, ஊக்கம் கொண்டு, நம் வழித் தோன்றல்களாகிய வாலிபர்கட்கு வழிகாட்ட வேண்டியும், நமது இந்து மதாபிமான சங்கத்திற்கு நல்வளர்ச்சி நல்குமாறும், நமது நண்பர் சொ. முருகப்பா அவர்கட்கு நீண்ட நல்வாழ்வைத் தருமாறும், எல்லாம் வல்ல சக்தியைப் பிரார்த்திப்போம் ஆக.

முற்றும்