பக்கம் எண் :

32மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்.28

இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான் 29 என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது 30 என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.

நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள்

‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’ 31 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’ 32 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.

இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;33 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;34 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.35 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந் தான்.36 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.37 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.38 படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்.39 வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்.40 இவ்வகைச் செய்திகள்


28. `அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்’ (பதிற். பதி. 2 : 10 - 12)

29. பதிற். 11 : 23 - 24

30. ௸ 17 : 10 - 15

31. ௸ 14 : 10

32. ‘அணங்குடை நோன்றாள்’, (பதிற். பதி. 2 : 12)

33. ‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலம்’, (பதிற். 14 : 11, 16 : 17)

34. ‘வயவர்’ பதிற். 12: 1, 19 : 7, ‘வயவர் வேந்து’, (பதிற். 15 : 21)

35. ‘போரடு தானை’, (பதிற் 11 : 16), ‘நிரைய வெள்ளம்’, (பதிற். 15 : 4)

36. ‘பசும்பூண்மார்பன்’, (பதிற். 17 : 14)

37. ‘போர்வல் யானைச் சேரலாதன்’, (பதிற். 15 : 23, 11 : 14 - 16)

38. ‘புரையோர் உண்கண்’, (பதிற். 16 : 18)

39. ‘சான்றோர் மெய்ம்மறை’, (பதிற். 14 : 12)

40. ‘படையே குழவ பாடினி வேந்தே’, (பதிற். 14 : 17)