பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்423

பெயரினன்.5 கடல்விழா என்பது வணிகர்விழா. முதுகுடுமிப் பெரு வழுதியின் மகன் நெடியோன் ஆவான். இவன் ‘குடுமி தன்கோ’ என்று குறிப்பிடப்படுகிறான். முதுகுடுமியின் மகனான நெடியோனின் கால்வழித் தோன்றியவன்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.6

போர்கள்

முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான். இமயமலைக்கு வடக்கிலுள்ள நாடுகளிலும், குமரி முனைக்குத் தெற்கிலுள்ள கடல் தீவுகளிலும், கீழைக்கடலிலும், மேலைக்கடலிலும் இருந்த தீவுகளிலும் இவனது புகழ் பரவியது.7 இவனிடம் கடற்படையும் யானைப்படையும் இருந்தனவாகக் கருதலாம். இவற்றைக்கொண்டு இவன் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். தான் வெற்றிபெற்ற இடங்களில் கிடைத்த செல்வங்களைக்கொண்டு தன்னிடம் பரிசில் நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கினான். நல்வேள்ளி என்று சிறப்பிக்கப்படும் வேள்வியை இவன் செய்தான்.8 கள்ளும் கறிச் சோறும் அளித்தான், போரில் வெற்றிபெற உதவியவர்களையும் வெற்றி பெற்றபின் பாராட்டியவர்களையும் தானே அழைத்து, வேண்டிய பரிசில்களைக் கொடுத்துக் கொண்டாடும் வேள்வி, நல்வேள்வியாகும்.9 இந்த நல்வேள்வியில் நான்மறை முனிவரை இவன் பாராட்டாதது கண்ட புலவர் ஒருவர்10 மனம் வருந்தி நான்மறை முனிவர்க்குத் தலை வணங்கியும், சிவ பெருமான் நகர்வலம் வரும்போது தன் குடையைச் சாய்த்துப் பிடித்தும் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினார். முதுகுடுமி, புலவர் அறிவுரையை ஏற்று அவர் விருப்பப்படி செய்தான். நான்மறை முறைப்படி யூபம் என்னும் வேள்வித் தூண்கள் பல நட்டான், நான்மறை வல்ல அந்தணர்களைக் கொண்டு பல வேள்விகளைச்


5. ‘முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம். 9 : 10)

6. மதுரைக். 759 - 768

7. புறம். 6 : 1 - 8

8. மதுரைக். 760

9. வேள்வி - யாகம்

10. புறம். 6 : 19 - 20