பக்கம் எண் :

 : :

1. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள்*

தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப் பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்.1 வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.

இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன் நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான்.

நெடியோன் என்னும்2 பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவ னாகவும், ‘நிலந்தருதிருவின்’ நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த


* தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

1. சிலப். 11 : 17 - 22

2. புறம். 9:10; மதுரைக். 763