| 94 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
காப்பாற்றுவான்;28 புகழ்தரும் கல்வி நலம்சான்றவன்;29 செம்மையான நாநலம் படைத்தவன்;30 அளக்க முடியாத நற்பண்புகள் மிக்கவன்.31 இவனது ஆண்மை நலம்32 கண்டு உலகிலுள்ள ஆண்களின் ஆண்மை தேய்வுற்றது. தோளில் பூமாலையணிந்து மகிழ்வுடன் இவன் வாழ்ந்தான்.33 பொன்மாலை அணிவதும் உண்டு.34 புரவி பூட்டின தேரில் போர்க்களம் செல்வதும்,35 கொடி பறக்கும் தேரில் பிற இடங்களுக்குச் செல்வதும்36 இவன் வழக்கம். பல வேற்படைகளைத் தாங்கிச் செல்வதும், யானைமீது செல்வதும் உண்டு.37 மனைவியின் மாண்பு இவனது மனைவி அந்துவஞ்செள்ளை. அவள் மையூர் (மைசூர்) கிழான் என்னும் வேளிர் தலைவனின் மகள். அறல் போன்ற அழகிய நீண்ட கூந்தலை உடையவள் இவள்.38 மனைவியர் இவன் தன் மலர்மாலை குழைய மகளிர் பலரைத் தழுவி மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது.39 இதனால் அந்துவஞ்செள்ளை யாகிய பட்டத்தரசியே அன்றிப் பிற மனைவியரும் இவனுக்கு உண்டு எனத் தெரிகிறது. மகன் பெருஞ்சேரல் சில காலம் மகப்பேறின்றி இருந்து தன் சித்துப் படிமைத் தவநெறியால் தன் பட்டத்தரசியின்பால் மகனைப் பெற்றான் அவன் நாடாளும் மன்னனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான்.40 இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாடாண்ட செய்திபற்றி வேறு குறிப்பும் இல்லை. ஒருவேளை நாடாளத் தொடங்கும்போதே போரில் ஈடுபட்டு மாண்டிருக்க வேண்டும்.
27. ௸ 72 : 5 - 16 28. ௸ 79 : 3 29. ௸ 80 : 17 30. ௸ 79 : 5 31. ௸ 79 : 8 32. ௸ 79 : 6 33. ௸ 79 : 7 34. ௸ 75 : 3 35 ௸ 80 : 13 36. ௸ 73 : 15 37. ௸ 75 : 2 - 3 38. ௸ 74 : 3 39 ௸ 79 : 6 - 7 40. பதிற். 74 : 19 - 21 |