பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 115 |
அடிக்குறிப்புகள் 1.“மூவன், முழுவலி முள்எயிறு அழுத்திய கதவில், கானலந் தொண்டிப் பெருநன் வென்வேல், பெறலருந் தானைப் பொறையன்.” (நற். - 18: 2-5) 2.`களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்’தாழிசை - 18. (கலிங்கத்துப் பரணி, இராசபாரம்பரியம்) உதியன் - சேரன், இங்குக் கணைக்கா லிரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை - காலில் இடப்பட்ட விலங்கு. 3.போர் அல்லது போஓர் என்பது சோழநாட்டுக் காவிரிக் கரைமேல் இருந்த ஓர் C. அவ்வூரிலிருந்த பழையன் என்பவன் சோழரின் சேனைத் தலைவன்.(அகம். 186: 15-16; 326: 9-12, நற்.10: 7-8) போர் என்னும் ஊரில் வேறு சில பேர்களும் நடந்திருக்கின்றன. (புறம். 62, 63, 368. இவற்றின் அடிக்குறிப்பு காண்க.) |