பக்கம் எண் :

192மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

புகழூருக்கு அடுத்த வேலாயுதம்பாளையம் என்னுங் கிராமத்து ஆறுநாட்டார் மலைக் குகையில் ஒரு பிராமி எழுத்து இருக்கிறது. இது, சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் சாசனத் தொகுப்பில் 1927-28ஆம் ஆண்டு 344 ஆம் எண் உள்ளது (No. 344 of 1927- 28) இந்த எழுத்தின் படம் காண்க.

இந்த பிராமி எழுத்துகள் பெரும்பாலும் தெளிவாகக் காணப் படுகிற போதிலும் சில எழுத்துக்கள் புரைசல்களுடன் சேர்ந்து காணப் படுகின்றன.

இந்த எழுத்தின் வாசகத்தைத் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள்,

1. கொற்றந்தை ளவன்

2. மூன்று

என்று படித்து, கொற்றந்தை (இ)ளவன் . . . மூன்று. . . (ஒரு முற்றுப் பெறாத சாசனம்) என்று விளக்கங் கூறியுள்ளார். 12 முதல் வரியில் நான்காவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதை இவர் ந் (தந்தகரம்) என்று வாசிக்கிறார். அதற்கு அடுத்துள்ள எழுத்தும் (ஐந்தாவது எழுத்து) புரைசல்களுடன் காணப்படுகிறது. அதை இவர் தை என்று வாசிக்கிறார். முதல் வரியில் கடைசி இரண்டு எழுத்துக்களை இவர் வன் என்று வாசிக்கிறார். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசல்களுடன் சேர்ந்திருக்கிறது. இதை இவர் மு என்று வாசிக்கிறார். இவ்வாறு இவர் வாசித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. முதல் வரியின் கடைசி இரண்டு எழுத்துகள் இவர் படிப்பதுபோல வன் அல்ல. அவை எயி என்னும் எழுத்துகள். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசலுடன் சேர்ந்து மு போலக் காணப்பட்டாலும் அது ம என்னும் எழுத்தே.

திரு. டி.வி மகாலிங்கம் அவர்கள் இந்த எழுத்துக்களைப் படித்து ஏறக்குறைய சரியான முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இதன் கருத்தைத் தெளிவாகவும் நன்றாகவும் விளக்காமல் விட்டுவிட்டார்.13 இந்தச் சாசனத்தின் முதல் வரியில் ஐந்தாவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து இன்ன எழுத்து என்று தெளிவாகத் தெரியவில்லை. ஞை