218 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
அடங்கியிருந்தது. மௌரியர் என்பவர், மகத நாட்டை யாண்ட மௌரிய அரசர் வழிவந்தவர் என்று கருதப்படுகின்றனர். இவர் மேற்குக் கடற்கரைப் பக்கத்தில் இருந்ததாகக் கருதப்படுகின்றனர். அக நானூறு என்னும் சங்க நூலில் கூறப்படுகிற வம்பமோரியர் என்பவர் இந்த மௌரியரின் முன்னோராக இருக்கக்கூடும். கடம்பர என்பவர் மைசூர் நாட்டின் ஒரு பகுதியில் இருந்தவர். கங்கர் என்பவர் கங்கவாடி நாட்டைச் சேர்ந்தவர். லாடர் என்பவர் லாட (குஜராத்தி) நாட்டவர். பிஷ்டபுரம் (பித்தாபுரம்) என்னும் கோட்டையையும் (கோதாவரி மாவட்டத்தில் உள்ளது) புலிகேசி கைப்பற்றினான்.1 பல்வர்களுக்குரியதாக இருந்த ஆந்திர நாட்டைப் புலிகேசி, மகேந்திரவர்மனுடன் போர்செய்து கைப்பற்றிக் கொண்டான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். வடஇந்தியாவை அரசாண்ட ஹர்ஷ வர்த்தனன் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, அவனை எதிர்த்து முறியடித்தவன் இந்தப் புலிகேசியே. இதனால் புலி கேசியின் புகழ் எங்கும் பரவிற்று. பாரசீக நாட்டை அரசாண்ட குஸ்ரு (இரண்டாவன்), புலிகேசியின் புகழைக் கேள்விப்பட்டு, இவனிடம் தூதரை அனுப்பி இவனுடன் நட்புக்கொண்டான். புலிகேசியின் சளுக்கிய இராச்சியம் வடக்கே நருமதையாறு முதல் தெற்கே வடபெண்ணையாறு வரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக்கூடாக் கடல் வரையிலும் பதவியிருந்தது. இந்தச் சளுக்கி இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைப் புலிகேசி தன் தம்பியாகிய குப்ஜவிஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். குப்ஜ விஷ்ணுவர்த்தனன் கலியாணியைத் தலைநகராக கொண்டிருந்தான் சளுக்கிய நாட்டின் மேற்குப் பகுதியைப் புலிகேசி அரசாண்டான். இவன் தலைநகரம் வாதாபி என்னும் பாதாமி நகரம். இவ்வாறு மகேந்திர வர்மன் காலத்தில் வட இந்தியாவை ஹர்ஷ வர்த்தனனும் தக்கண இந்தியாவைப் புலிகேசியும் அரசாண்டனர். புலிகேசியின் சளுக்கிள இராச்சியத்திற்குத் தெற்கே மகேந்திர வர்ம னுடைய பல்லவ இராச்சியம் இருந்தது. இந்தப் பல்லவ இராச்சியம், தொண்டைமண்டலம் சோழமண்டலம் என்னும் இரண்டு மண்டலங் களைக் கொண்டிருந்தது. அஃதாவது வடக்கே வடபெண்ணையாறு
1. Ind. Anti. Vol VIII P. 237 |