பக்கம் எண் :

230மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

“பூழியர் தமிழ்நாட் டுள் பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப.”

“பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியுமச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங் காலை”

(திருஞான : 601-2)

இக்காலத்தில் பாண்டியநாட்டை அரசாண்ட மன்னன் செங்கோற் சேந்தன்.

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் சமணசமயமும் பௌத்தமதமும் பெருகிற் செழித்திருந்தன; சைவ வைணவ சமயங்கள் குன்றியிருந்தன.

2. சைவ வைணவ மதங்கள்

சூமண சாக்கிய மதங்கள் சிறப்புற்றிருந்தன என்று சொன்னால், மற்றச் சைவ வைணவ மதங்கள் இல்லாமற் போயின என்று கருதக் கூடாது. அக்காலத்தில் சைவ வைணவ சமயங்களும் இருந்தன. சைவக் கோயில்களும் வைணவக் கோயில்களும் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்தன. ஏன்? சைவ மடங்கள்கூடச் சிற்சில இடங்களில் அக்காலத் தில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், சைவ வைணவச் சமயங்கள் சிறப்புப் பெறாமல் இருந்தன.

சைவ சமயப் பிரிவுகள்

அக்காலத்திலே சைவசமயத்தில் காபாலிகம், பாசுபதம், பைரவம் முதலான பிரிவுகள் இருந்தன. என்னை?

“விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவீனிற் பொலியும் திருவாரூர் அம்மமானே.”

என்றும்,

“தலையிற் றரித்தவென்புத் தலைமயிர் வடமும்பூண்ட
விலையிலா வேடர்வீழி மிழலையுள் விகிர்தனாரே.”

என்றும்,