பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு237

என்பது அச்செய்யுள்.

இப் பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பது இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்னும் பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன் குணதரன் என்னும் இரண்டு சொற்களும் ஒரே அரசனைக் குறிக்கின்றன என்றும், இப்பெயர்கள் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் என்றும், ஆகவே அப்பால் சைவனாக்ப்பட்டவன் மகேந்திரவர்மன்தான் என்றும், அவ்வரசன் தனது சிறப்புப் பெயராகிய குணதரன்1 (குணபரன்) என்னும் பெயரால் குணதரவீச்சரம் கட்டினான் என்றும் சரித்திர ஆராய்ச்சிக் காரர் கூறுவர்.

வல்லம் குகையில் உள்ள தமிழ் எழுத்து.

“குணபரன்” என்பது இதன் வாசகம்


1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியிருக்கிறார். பெரியபுராணம் பதிப்புகள் எல்லாவற்றிலும் குணதரவீச்சரம் என்றே காணப்படுகிறது. பெரிய புராண வசனம் எழுதிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களும் குணதரவீச்சரம் என்றே எழுதியிருக்கிறார். ஆனால், 1950-ஆம் ஆண்டில் (விக்ருதி ஆண்டு ஆவணி மூலநாள்) திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தார் வெளியிட்ட பெரியபுராணத்தில் குணதர வீச்சரம் என்னும் பெயர் குணபரவீச்சரம் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் கூறப்படவில்லை.

இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்களின் ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இச்சொல் இவ்வாறு மாற்றப்பட்டது போலும்.

பதிப்பாசிரியர்கள் நூலிலுள் சொல்லையோ அடியையோ மாற்றினால் அதற்குக் காரணம் கூறவேண்டுவது முறையாகும். காரணங்கூறாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூலில் சொற்களை மாற்றியமைப்பது பெருந்தவறாகும். சைவத்திற்கு தமிழிற்கும் தொண்டு செய்வதாகாது.