பக்கம் எண் :

250மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

தன் தந்தையாகிய மகேந்திரவர்மனைப் போலவே நரசிம்ம வர்மனும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான்.

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ இராச்சியம், வடக்கே வடபெண்ணை ஆறு முதல் தெற்கே வெள்ளாறு வரையில் பரவியிருந்தது. அஃதாவது தொண்டைநாடு சோழநாடு ஆகிய இரண்டு நாடுகளைக் கொண்டிருந்தது.

மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்ல புரத்திலே, தர்மராசரதம் என்று வழங்கப்படுகிற கற்கோயிலில் இவ னுடைய சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பாறைக் கோயிலில் காணப்படுகிற இவனுடைய சிறப்புப் பெயர்களாவன

‘ஸ்ரீநரசிம்ம’ என்பது இதன் வாசகம். வடமொழி எழுத்து

ஸ்ரீநரசிம்ம. (இப் பெயர் இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது), பிருதிவீசார. (உலகத்தின் சாரமாகவுள்ளவன்), ஸ்ரீபர (செல்வத்தைத் தாங்கி யுள்ளவன்), புவன பாஜன (உலகத்தை உரிமையாகக் கொண்டவன்), ஸ்ரீமேக (செல்வக் கொண்டல்), திரைலோக்ய வர்த்தன (மூவுலகத்தை யும் வளர்ப்பவன்), விதி (உலக ஒழுக்கத்தை அமைப்வன்), அநேகோ பாய (பல சூழ்ச்சியறிந்தவன்), ஸ்திரபக்தி (நிலைத்த பக்தியுள்ளவன்), மதனாபிராம (மன்மதன் போன்ற அழகுள்ளவன்), அப்ரதிஹத ஸாஸன (மறுக்கமுடியாத ஆணையை யுடையவன்), காம லலித (காமனைப் போன்ற அழகன்), அமேய மாய (காணமுடியாத சூழ்ச்சிகளை யுடையவன்), சகல கல்யாண (எல்லா நன்மைகளையும் உடையவன்), நயனமனோகர (காட்சிக்கு இனியன்), பராபர (ஆற்றல் வாய்ந்தவன்), அநுபம (நிகரற்றவன்), நயாங்குர (அறிவுக் கொழுந்து), லலித (இனியன்), சர்வதோபத்ர (அகில புனிதன்), ஸ்ரீநிதி (செல்வமுடையவன்), திருத்தர (நிகரற்றவன்), விப்ராந்த (மனவெழுச்சியுள்ளவன்), சத்ய பராக்ரமன் (உண்மை வீரன்), ரணஜெய (போரில் வெற்றி கொள்பவன்).2