பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு265

அவனை நியமித்தான். அவ்வாறே, மருகனான மானா, கஸ்ஸபனுடைய மூத்தமகனான மானாவையும் அவன் தம்பியரையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டான். கஸ்ஸபன் நோயினால் இறந்தான்.

பிறகு மானா, உரோகண நாட்டிலிருந்த தன் தந்தையாகிய தப்புலன் என்பவனை அநுராதபுரத்திற்கு அழைத்து அவனை இலங்கைக்கு அரசனாக்கினான். இந்தத் தப்புலன் என்பவன், காலஞ் சென்ற கஸ்ஸபனுடைய தங்கையின் கணவன் தப்புலன் இலங்கைக்கு மன்னன் ஆக்கப்பட்டதை அநுராதபுரத்திலிருந்த தமிழர்கள் விரும்ப வில்லை. இக்காலத்தில் இலங்கையின் தலை நகரமான அநுராத புரத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். தமிழரின் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. ஆகவே தமிழர்கள் தலைநகரமாகிய அநுரையைக், கைப்பற்றிக்கொண்டு, தமிழ்நாட்டில் புகல் அடைந்திருந்த ஹத்த தாட்டனை இலங்கைக்கு வரும்படி அழைத்தார்கள். ஹத்ததாட்டன் உடனே தமிழச் சேனையுடன் புறப்பட்டு அநுரைக்கு வந்தான். இதை யறிந்த தப்புலன், அரண்மனையிலிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக கொண்டு அநுரையை விட்டுத் தனது உரோகண நாட்டிற்குப் போய்விட்டான். அவன் மகனான மானாவும் கிழக்கு மாகாணத்திற்குப் போய்விட்டான். ஆகவே, அநுரைக்கு வந்து சேர்ந்த ஹத்ததாட் டன் எதிர்ப்பு இல்லாமல் அரசனானான். ஆனால், கிழக்கு மாகாணத் தில் இருந்த மானா, படையெடுத்து வந்து ஹத்ததாட்டனுடன் போர் செய்தான். அப் போரிலே மானா இறந்தான். தன் மகன் மானா இறந்த செய்தியைக் கேட்டு உரோகனை நாட்டிலிருந்து தப்புலன் துயர மடைந்து இறந்து போனான். இந்தத் தப்புலன் இலங்கை மன்னனாக ஆறு நாட்கள் மட்டும் இருந்தான்.

மானாவைக் கொன்று இலங்கையின் மன்னன் ஆன ஹத்த தாட்டன் தன் பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக் கொண்டான். இவனைத் தாட்டோபதிஸ்ஸன் இரண்டாமவன் என்று சரித்திர நூலோர் கூறுவர். இவன் தன் சிற்றப்பன் மகனான அக்கபோதி என்பவனைத் தக்கின தேசத்திற்கு இளவரசனாக்கினான்.

மானா என்பவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த கஸ்ஸப அரச னுடைய மூத்த மகனான மானா என்பவன், இப்போது வயது நிரம்பப் பெற்று, மலையநாட்டை அரசாண்ட ஒரு சிற்றரசனுடைய மகளான சங்கை என்பவளை மணஞ்செய்துகொண்டு, உத்தர தேசத்தில் (இலங்