பக்கம் எண் :

274மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

இவர் மிகுந்த வயதுசென்ற “தொண்டு” கிழவராக இருந்தபோது, சீகாழியில் இருந்த ஐந்து வயது சிறுவராகிய திருஞானசம்பந்தரைக் கண்டார். அதுமுதல் இவ்விரு நாயன்மார்களும் நண்பராக இருந்தனர். அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமா நாயனார், மங்கையர்க் கரசியார், குலச்சிறை நாயனார் முதலியவர்கள் இவருடன் பழகிய நாயன்மார்களாவர்.

பாண்டிநாட்டிலே அரசுபுரிந்த பாண்டியன் நெடுமாறன் சமணனாக இருந்தான். அவனைத் திருஞானசம்பந்தர் சைவசமயத்தில் சேர்ந்த பிறகு, திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது பாண்டியன் நெடுமாறனும் அரசி பாண்டிமா தேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் ,வரை வரவேற்றார்கள். பாண்டிநாட்டு யாத்திரைக்குப் பிறகு திருநாவுக்கரசர் தமது எண்பத்தொன்றாவது வயதில் சிவபதம் அடைந்தார். இவர் உத்தேசம் கி. பி. 569 முதல் 650 வரையில் வாழ்ந்திருந்தார்.1

திருஞானசம்பந்தர்

சீர்காழியிலே சிவபாதவிருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். மூன்றாவது வயதிலே திருவருள் பெற்று, சிவபெருமானை இனிய பாடல்களினாலே பாடித் துதிக்கும் ஆற்றல் அடைந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாணர் இவர் பாடிய இசைப்பாட்டுகளை யாழில் அமைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இவருக்கு முன்பே பக்தியியக்கத்தையும் சைவ சமயத்தையும் பரப்பிவந்த மிக வயோதிகரான திருநாவுக்கரசர், மிக இளையவரான ஞானசம்பந்தரைச் சீகாழிக்கு வந்து கண்டு மகிழ்ந்தார். முதிர்ந்த வயதினரான திருநாவுக்கரசரைக் கண்ட இளைஞரான ஞானசம்பந்தர், அவரை அப்பா என்று அழைத்தார் ஆதலினாலே, திருநாவிக்கரசருக்கு அப்பர் என்னும் பெயரும் வழங்கலாயிற்று.

திருஞானசம்பந்தர், பௌத்த ஜைன சமயங்களையழித்துப் பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் நிலைநாட்டுவதில் தமது வாழ் நாளைக் கழித்தார். இவருடன் சிறுத்தொண்டர், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர் முதலியவர்கள் நண்பராக இருந்தனர். திருநாவுக்கரசு சுவாமிகள், குணபரன் என்னும் மகேந்திரவர்ம பல்லவ அரசனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதுபோலவே,திருஞான