362 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
அடியேன் பெற்ற மக்களிவர் அடிமையாகக் கொண்டருளிக் கடிசேர் மலர்த்தாள் தொழுதுயக் கருணை அளிக்வேண்டும் என்று வேண்டினார். சுந்தரர் அரனை மறுத்து, “இவர்கள் எனது மகளாகக் கடவர்” என்று கூறி, அவர்களைத் தமது குமாரத்திகளாக ஏற்றுக் கொண்டார்.24 சுந்தரர், கோட் புலியாரையும் அவரது குமாரத்திகளையும் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். “கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்குழல் சிங்கடியப்பன் திருவாரூரன் உரைத்த பாடீராகிலும் பாடுமின் தொண்டீர் பாடநும் பாவம் பற்றறுமே.”25 “நாணியூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்.”26 என்றும், “சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடியப்பன்”27 என்றும், “இளங்கிளை யாரூரன் வனப்கை யவள் அப்பன்”28 என்றும், “திருநாவலூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”29 என்றும், “நறவம் பூம்பொழில் நாவலூரன் வனப்பகை யப்பன் சடையன்தன் சிறுவன் வன்றென்ட னூரன் பாடிய பாடல பத்திவை வல்லவர்”30 என்றும், “செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்றெஞ் |