பக்கம் எண் :

384மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

மன்னன் விசயனுக்கு மகட்கொடை அளித்ததைத் தவிர, அப் பாண்டியமன்னனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

பாண்டிய அரசி

சந்திரகுப்த மௌரியருடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 304-ல் செலியூகஸ் நிகேட்டாருடைய தூதனாகப் பாடலிபுத்திரத்தில் இருந்த மெகஸ்தனீஸ் தாம் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு பெண் ஆட்சி செய்தாள் என்று கூறியுள்ளார். அவளது பெயர் தடாதகைப் பிராட்டி என்று தமிழ்ப் புராணங்கள் கூறினாலும் அவளுடைய சரியான பெயர் தெரியவில்லை.

கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகன் தனது பாறைக் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய அரசர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான்.33 தன்னுடைய தருமத்தை மக்களிடையே பிசாரம் செய்யவும். மக்களுக்கும் விலங்குகளுக்கும் உதவி செய்வதற்கும் பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பெற்றதாகக் கூறி யுள்ளான். இக் கல்வெட்டுகள் பாண்டியர்கள் என்று குறிக்கின்றன வேயன்றிக் குறிப்பிட்ட அரசனுடைய பெயரைக் கூறவில்லை.

கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் ஏறத்தாழக் கி. மு. 185 இல் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்து தமிழ் நாட்டு மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து பொன், மணி, முத்துகள் முதலியவற்றைப் பெற்றான் என்று கூறும் அத்திகும்பா கல்வெட்டிலும் பாண்டிய மன்னனுடைய பெயர் குறிப்பிடப்பெறவில்லை.

ஆகையால், இயற்பெயர் தெரியாத இந்தப் பாண்டிய அரசனும் அரசியும் அயலகக் குறிப்புகளால் அறியப்படும் அரச அரசியர் ஆவர்.

2. செழியன் என்னும் பெயருடைய அரசர்கள்

செழியன்

இப் பெயர் பொதுவாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுவதாகும். தெளிவாக அறியப்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமணரைப் பேணியவன், ஆரியப் படை கடந்தவன். தலையாலங்கானத்துச் செருவென்றவன் ஆகிய மூவரைக் காலவரிசைப்படக் கூறலாம். எனினும், இவர்களது ஆட்சிக் காலங்