| 424 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
பட்டதாக இச் சாசனம் கூறுகிறது. இச் சாசனம் கூறுகிற சங்கம் வச்சிர நந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும். (பக்கம் 59) மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப்பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம் என்றும் பெயர் ஆதரிக்கிறது. (பக்கம் 60) வச்சிர நந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளி வந்திருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. (பக்கம் 161) பிள்ளையவர்கள் இவ்வாறு தமது ‘தமிழ் மொழி, இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே எழுதியிருக்கிறார். இந்தத் தெளிவான பொருள் என்னவென்றால் - வச்சிரநந்தி என்னும் சமணர் கி. பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர், சமணர்கள்தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில் தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம். இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச் செப்பேட்டின் செய்தி இது. “தடம் பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் அரும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க விருவேந்தனரைச் கொலைவாளிற் றலைதுயித்துக் குறைத்தலையின் கூற்தொழிந்தும் மஹாபாரதத் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்துப் மஹாராஜரும் ஸார்வ பௌமரும் தம்மகிமண்டலங் காத்திருந்தபின்...” |