பக்கம் எண் :

430மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

காலத்திலே, தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே இருந்தவர் என்பது உறுதி. நெடுஞ் செழியன் காலத்துக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்று கூறுவது தவறு என்பதைக் கூறிக் கொண்டு இதனை முடிக்கிறேன். பிள்ளை யவர்களின் ஏனைய ஆராய்ச்சிகளைப் பற்றிப் பின்னர் எழுதுவோம்.

அடிக்குறிப்புகள்

1.எரித்திரையக் கடலின் ஆதிப்பெயர் `Erythraean’ `e’ என்பதாகும். எரிதிரியன்கள் (என்போர்) என்ற செந்நிறமுடைய மக்கள் அக் கடல்களில் வாணிகம் செய்துவந்தனர்.

2.Argalus

3.Orgalic s.a.

4.முதுமொழிக்காஞ்சி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று கூறுமிடத்து அச்சொல் கடலின் பொதுப் பெயராக அமைந்திருந்ததைக் காணலாம்.

5.`பஃறுளி யாற்றுடன் பண்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (சிலப் 11 : 19-20)

`மலி திரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவா நாடு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’(கலித். 104 - 1- 4)

`அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும்

கபாடரமும் என்ப.’(இறையனார் அகப் பொருள் உரைப்பாயிரம்)

6.மகாவம்சம், 22:20.

7.மணிமே. 5 : 37.

8.லெமூரியாபற்றிய தீர்ந்த முடிவு இதுகாறும் கிடைக்கவில்லை. எனினும், லெமூரியாக் கண்டம் இருந்தது உண்மையே என்றும் 1,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும் மென்றும் இந்நூலின் முதல் தொகுதியில் `தொல்பழங்காலம்’ பக்கம் 25 இல் விளக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்று தீர்மானமாகக் கூற