பக்கம் எண் :

76மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

தமக்கையை இவனுடைய தாயாதித் தமயனான சேரலாதன் (இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்) மணஞ்செய்திருந்தான். அந்த அரசிக்கும் ‘வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி’ என்று பெயர் இருந்தது (4ஆம் பத்து, பதிகம் 1-3).எனவே, செ.க.வா ஆதனும் நெடுஞ்சேரலாதனும் சம காலத்தில் முறையே கொங்கு நாட்டையும் சேரநாட்டையும் அரசாண் டனர் என்று தெரிகின்றது. இவர்களுக்குப் பெண் கொடுத்த மாமனா ராகிய வேள் ஆவிக்கோமான் பதுமன், பொதினி என்னும் வையாவி நாட்டையாண்ட சிற்றரசன் என்று கூறினோம். அந்த வையாவி நாடு அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. இக்காலத் தில் அது பழனி என்னும் பெயருடன் பாண்டி நாட்டு மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது.

(மூத்தவழி)
சேரநாட்டுச் சேரர்
(இளையவழி)
கொங்கு நாட்டுப் பொறையர்

உதியஞ்சேரல் = வேண்மாள் நல்லினிஅந்துவன் பொறையன் =
பொறையன் பெருந்தேவி
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்
=  வேளாவிகோமான்
பதுமன்தேவி I
பல்யானைச்
செல்கெழுகுட்டுவன்
செல்வக்கடுங்கோ
வாழியாதன் =
வேளாவிகோமான்
பதுமன்தேவி II

செ. க. வா. ஆதனுக்கும் அவனுடைய அரசியாகிய பதுமன் தேவிக்கும் இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர் என்று அறிகிறோம்.3 இவ்விரு புதல்வர்களில் ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பிற்காலத்தில் தகடூரை வென்று புகழ்பெற்றவன். 8ஆம் பத்துப் பதிகம்). இளைய மகன் பெயர் குட்டுவன் இரும்பொறை என்பது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று சிவராச பிள்ளை கருதுகிறார்.4 இவர் கருதுவது தவறு. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு மக்கள் இருந்ததையறியாமல், ஒரே மகன் இருந்தான் என்று கருதிக்கொண்டு இவ்வாறு எழுதினார் என்று தோன்றுகிறது. கே. ஜி. சேஷ ஐயரும் இதே தவற்றைச் செய்துள்ளார்.5 நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தவற்றைச் செய்தேன். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதினேன்.6 அது தவறு