78 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
வயிரியரை (இசைவாணரை) இவன் ஆதரித்தான். தான் ஆதரித்ததல்லாமல், தான் இல்லாதபோது அவர்கள் அரண்மனை வாயிலில் வந்தால் தன்னைக் கேளாமலே அவர்களுக்குப் பொருளை யும் குதிரைகளையும் வண்டிகளையும் கொடுத்தனுப்பும்படி தன்னுடைய அரண்மனை அதிகாரி களுக்குக் கட்டளையிட்டிருந் தான்.9 இவனுடைய கொடைச் சிறப்பைக் கபிலர் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ‘என்னைப் புரந்த பாரிவள்ளல் இறந்து போனபடியால் உம்மிடம் பரிசுபெற உம்மை நாடிவந்தேன் என்று நினைக்க வேண்டாம். செல்வக்கடுங்கோ வாழியாதன் பெரிய வள்ளல், இரவலரை ஆதரிக்கும் வண்மையன் என்று பலருங் கூறக்கேட்டு நேரில் கண்டு மகிழ வந்தேன்’ என்று கூறுகிறார். “புலர்ந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்அளிக்கென இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கான் ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலுநின் நல்லிசை தர வந்திசின்” (7ஆம் பத்து 1: 7-14) இவன் மீது ஏழாம் பத்தைப் பாடிய கபிலருக்கு இவ்வரசன் பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்தான். கைச்செலவுக்கென்று நூறாயிரங் காணம் (ஒரு லட்சம் பொற்காசு) கொடுத்து, கொங்கு நாட்டிலுள்ள நன்றா என்னும் மலைமேல் ஏறி நின்று அங்கிருந்து காணப்பட்ட நாடுகளின் வருவாயை அவருக்குக் கொடுத்தான்.10 செ.க.வா. ஆதனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ஒன்பதாம் பத்தில் பாடிய பெருங்குன்றூர்கிழார், செ.க.வா. ஆதன் நாடு காண் நெடுவரை மேல் இருந்து கபிலருக்குக் காட்டிக் கொடுத்து நாடுகளைப் பற்றித் தம்முடைய செய்யுளில் குறிப்பிட்டுள்ளார். “கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச் சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையின் நெஞ்சின்
|