பக்கம் எண் :

88மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

6.“பல்பயன் நிலைஇய கடறுபடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம்பூரிந்து காக்கும், வில்பயில் இரும்பில் தகடூர் நூறி”. (8 ஆம் பத்து 8: 7-9) “பல்வேல தானையதிக மானோடு, இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத், துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத், தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய, அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறை”. (8ஆம் பத்து, பதிகம்.)

7.(இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய `மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும்புத்தகத்தில் காண்க).

8.“கொல் களிற்றியானை பெருத்தம் புல்லென, வில்குலையறுத்துக் கோலின் வாரா, வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்தவர், அரசுவா வழைப்பக் கோடறுத்தியற்றிய, அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபில், கடவுள் அயிரை.” (8ஆம் பத்து 9: 10-18).

9.“முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபாடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” (8ஆம் பத்து 4: 24: 28) “நரைமூதாள னென்றது புரோகிதனை”. பழைய உரை). தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பசும்பூட் பொறையன் என்றும் (அகம். 308: 4) பெரும்பூட் பொறையன் என்றும் (குறும். 89:4) சிறப்புப் பெயர் உண்டு.

10.(`சால்பும் செம்மையும் உளப்படப் பிறிவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வன் பெற்றனை’ (8ஆம் பத்து. 19-21).