பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்125

அடிக்குறிப்புகள்

1. சீவகசிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலர், 1952, பக்கம் 217. சீவக சிந்தாமணி கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று இந்நூலாசிரியர் முன்பு எழுதியது தவறு. ‘செந் தமிழ்ச் சிந்தாமணி - கால ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சிந்தாமணி எழுதப் பட்ட தென்று இந் நூலாசிரியர் எழுதியுள்ளார். அது தவறு என்பதும் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்பதும் இப்போது தெரிகிறது.

2. அகப்பொருளுக்குத் தமிழ்என்னும் பெயர் இருந்தது என்பதை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘தமிழ் அகம்’ என்னும் கட்டுரையில் காண்க: Journal of Tamil Studies, No.3, Sep.1973.