| பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு | 197 |
இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சே ரலாதன் வாழ்க அவன் கண்ணி (2ஆம் பத்து 10;2-5) என்று நெடுஞ்சேரலாதன் தன் கடற்போர் வென்ற செய்தி கூறப்படுகிறது. நெடுஞ்சேரலாதனுடைய மகனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் இக்கடற்போரை நேரில் சென்று நடத்தி வெற்றி பெற்றதைப் பதிற்றுப்பத்து 5ஆம் பத்துச் செய்யுட்கள் கூறுகின்றன. தானை மன்னர் இனி யாருளரோ நின்முன்னு மில்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசினோரோ (5ஆம் பத்து 5: 17- 22) இதில், கடற்போரைச் செய்தவர் செங்குட்டுவனுக்கு முன்னர் ஒருவரு மிலர் என்று கூறப்படுவது காண்க. இதனால், கடற்போரைத் தன் தந்தை யின் பொருட்டு முன்னின்று நடத்தியவன் செங்குட்டுவனே என்பது தெளிவாகத் தெரிகின்றது. செங்குட்டுவன் கடற்போரைச் செய்ததைக் கூறுகிற செய்யுட்கள் வேறு சில உள்ளன. அவற்றையெல்லாம் இங்குக் காட்ட வேண்டிய தில்லை என்று கருதுகிறோம். சேர அரசர் கடல் தீவிலிருந்த குறும்பரை வென்றதற்கும் துளு நாட்டு நன்னருக்கும் என்ன பொருத்தம், என்ன தொடர்பு என்று வாசகர்கள் கருதக்கூடும். கடல் தீவில் இருந்த குறும்பருக்கும் துளு நாட்டு நன்னருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.2 இரண்டு காரணங்களைக் கொண்டு இருவருக்கும் தொடர்புண்டென்பதை யூகிக்கலாம். கடல்தீவு மிகச் சிறியது. அத்தீவிலிருந்தவர் தங்கள் தீவுக்கு அடுத்திருந்த நாட்டினரின் உதவி இல்லாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு உடையவர் அல்லர் |