| பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு | 243 |
என்றும், கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென (அகம்148: 7-8) என்றும் பரணர் கூறுகிறார். ஆஅய் எயினன் இறந்தபிறகு அவனுடைய உடம்பை அவ னுடைய மனைவியரிடம் கொடுக்காமல் இருந்தான் நன்னன். அதனால் அவர்கள் பூசல் உண்டாக்கினார்கள். அப்போது அகுதை என்னும் சிற்றரசன் பூசலை நீக்கி அவன் உடம்பை அவர்களுக்குக் கொடுத்தான். வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞிலியோடு நண்பகல் உற்ற செருவிற் புண் கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி நிழல்செய் துழறல் காணேன் யானெனப் படுகளங் காண்டல் செல்லான் சினஞ் சிறந்து உருவினை நன்னன் அருளான் சுரப்பப் பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் குரூஉப் பூம் பைந்தார் அருகிய பூசல் வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந்தானை அகுதை களைதந் தாங்கு (அகம் 208: 5-18) என்றும் இச்செய்திகளைப் பரணர் தமது செய்யுள்களில் கூறுகிறார். பரணர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவன் மகன் நார்முடிச் சேரல், மற்றொரு மகன் சேரன் செங்குட்டுவன் ஆகியோர் காலத்தில் இருந்தவர். சேரன் செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர். அப்போது அவர் வயது முதிர்ந்த வராக இருந்தார். அவர் காலத்துக்குப் பின் செங்குட்டுவன் செய்த போர்களும் நிகழ்ச்சிகளும் அவனைப் பாடிய ஐந்தாம் பத்தில் இடம்பெறவில்லை. V. கடம்பும் கடம்பரும் கடல் துருத்தி என்னுந் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வைத்திருந்த குறும்பரைச் சேரர் வென்று அடக்கியதை இந்நூலில் |