பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு169

செய்தார்கள். சோழன் வெற்றிபெறும் நிலையில் இருந்தான். அப்போது பூதுகனின் சேனைத் தலைவனான மணலேரன் கள்ளத்தனமாகப் போர் செய்து சோழனைக் கொன்று விட்டான். ஆகவே வெற்றி கன்னர தேவனுக்காயிற்று. இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைந்த கன்னரதேவன் பூதுகனுக்குப் பல ஊர்களைத் தானமாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். பூதுகன், இப்போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய வீரனாகிய மணலேரனுக்கு ஆதுகூர் பன்னிரண்டையும் பெள்வொள நாட்டில் காதியூரையும் தானமாகக் கொடுத்தான். இச்செய்தியைக் கூறுகிற இச்சாசனம் `வாள்கழுவிக் கொடுத்தான்’ என்று கூறுகிறது. இந்தக் கன்னடச் சாசனத்தின் இப்பகுதி வாசகம் இது:

20.    ஸ்வஸ்திஸ்ரீ. எறியப்பன மகம் ராசமல்லனம் பூதுகம்
       காதிகொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ
       கன்னர தேவம் சோழனம் காதுவந்து பூதகம்
       ராஜாதித்தயம் பிஸுகெயெ கள்ளனாகி ஸுரிகிறிது

21.    காதிகொந்து பனவஸெ பன்னிர்ச் சாஸிரமும் பெள்வொள
       மூநூறும் புரிகெரெ மூனூறும் கிஸுகாடெழ்பதும்
       பாகெநா டெழ்பத்துவம் பூதுகங்கே கன்னரதேவம்
       மெச்சு கொட்டம். பூதுகனும் மணலேரம்

22.    தன்ன முந்தே நிந்திரிதுதர்க்கெ மெச்சி ஆதுகூர்ப்

23.    பன்னெரடும் பெள்வொளத காதியூருமம் பாள்.

24.    கச்சுகொட்டம். மங்கள மஹாஸ்ரீ.1

இச்சாசனத்தின் இறுதியில் பாள் கச்சு கொட்டம் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள்: பாள், பாளு - வாள், கச்சு, கர்ச்சு, கழ்ச்சு - கழுவு பாள் கச்சு கொட்டம் - வாள் கழுவிக் கொடுத்தான். இது பற்றி டி. ஏ. கோபிநாதராயர் அவர்களும் எழுதியுள்ளார்.2

வெற்றிவாளை, வெற்றிக்கடவுளாகிய கொற்றவை (துர்க்கை) மேல் இரத்தக்கறை போகக் கழுவும் வழக்கம் இன்னொரு சாசனத்திலும் கூறப்படுகின்றது. சேர நாட்டில் இரவி வேந்தன் (வீரரவி கேரளவர்மன் திருவடி) என்னும் அரசன் காலத்தில் இச்சாசனம் எழுதப்பட்டது.இது இப்போது வாள் விச்சகோட்டம் என்று பெயருள்ள ஊரில் உள்ள பகவதி (கொற்றவை) கோவிலில்இருக்கிறது. வாள்விச்ச கோட்டம் என்று தவறாக வழங்கப்படுகிற இப்பெயரின் சரியான பெயர்