180 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயிறொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கம்.’ என்று சிலம்பு (இந்திரவிழவூர் 40-58) கூறுகிறது. பட்டினப்பாக்கத்திலே பல சமயத்தாருக்கும் கோவில்கள் இருந்தன. திருமால் கோவிலாகிய மணிவண்ணப் பெருமாள் கோவிலும், சிவ பெருமான் கோவிலாகிய ஊர்க்கோட்டமும், முருகனுடைய வேற் கோட்டமும், பௌத்தர்களின் இந்திர விகாரைகளும், ஜைனரின் சினகர மும், இந்திரன் கோட்டங்களும் ஏனைய கோவில்களும் இருந்தன. “பிறவாயாக்கைப் பெரியோன் கோவிலும் ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும் வாள்வளை மேனி வாலியோன் கோவிலும் நீலமேனி நெடியோன் கோவிலும் மாலை வெண்குடை மன்னவன் கோவிலும்” (சிலம்பு - இந்திரவிழவூர் 169 - 173) ‘அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்’ (சிலம்பு - கனாத்திறம் 9-13) என்று புகார்ப்பட்டினத்திலிருந்த கோவில்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. (அமரர் தருக்கோட்டம் - தருநிலை. கற்பக மரம் நிற்கும் கோவில். வெள்ளையானைக் கோட்டம் - ஐராவதம் நிற்கும் கோவில். புகர் வெள்ளை நாகர் கோட்டம் - அழகிய பலராமர் கோவில். உச்சிக்கிழான் |