| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 57 |
கூறுவது தவறு. கடல் கொள்ளைக்காரருக்குக் கடம்பர் என்னும் பெயர் இருந்ததில்லை. வனவாசிக் கதம்பர் கடல் கொள்ளைக் காரராக இருந்ததும் இல்லை. நெடுஞ்சேர லாதனும் சேரன் செங்குட்டுவனும் வென்ற கடல் குறும்பர் கி.பி. 2ஆம் நூற்றாண் டில் இருந்தவர். வனவாசிக் கதம்பர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர். இருவரையும் ஒன்றாகப் பிணைப்பது தவறு. சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுபோலக் கடம்பர் என்று பெயர் இருந்ததில்லை. கதம்பர் என்றுதான் சாசனங்கள் கூறுகின்றன. கடலில் நாவாயோட்டும் தொழில் செய்பவருக்கு மீகாமர் என்பது பெயர். கப்பலோட்டும் தொழில் செய்தவர் பரதர் என்றும் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் துறை முகப்பட்டினங்களில் குடியிருந்தார்கள். கப்பல்கள் துறைமுகத்தை யடைந்தவுடன் கப்பல்களில் தொழில் செய்யும் மாலுமிகள் கள்ளையுண்டனர். அவர்களுக்காகத் துறைமுகங்களில் கள் விற்கப்பட்டது. ‘வேறுபன் னாட்டுக் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் களிமடைக் கள்ளின் சாடி’ (நற்றிணை 295: 5-8) துறைமுகங்களில் விற்கப்பட்ட கள்ளைக் குடித்து மாலுமிகள் மகிழ்ச்சியாக இருந்ததை மணிமேகலை கூறுகிறது. ‘முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணி’ (மணி, 7: 20-72) நாவாய்க் கப்பல்கள் துறைமுகத்தையடைந்தபோது அதை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டழைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது. ‘தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல்’ (பரிபாடல் 10: 38-39) நாவாயில் கப்பலோட்டுந் தொழில் செய்த ஓர் இளையவன் தன் புது மனைவியைப் பிரிந்து கப்பலில் தொழில்செய்யச் சென்றான். அவ னுடைய மனைவி அவன் எத்தனைக் காலங்கழித்து திரும்பி வரு வானோ என்று மனக் கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள் என்று மருதன் இளநாகனார் கூறுகிறார். |